தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Disco Shanti: அவர் படு செக்ஸிதான்; அசிங்கம் கிடையாது! - சில்க்கை நினைத்து உருகிய டிஸ்கோ சாந்தி!

Disco Shanti: அவர் படு செக்ஸிதான்; அசிங்கம் கிடையாது! - சில்க்கை நினைத்து உருகிய டிஸ்கோ சாந்தி!

Jun 08, 2023, 05:31 AM IST

google News
சில்க் ஸ்மிதாவின் மறுமக்கம் குறித்து நடிகை டிஸ்கோ சாந்தி பகிர்ந்தவற்றை இங்கு பார்க்கலாம்.
சில்க் ஸ்மிதாவின் மறுமக்கம் குறித்து நடிகை டிஸ்கோ சாந்தி பகிர்ந்தவற்றை இங்கு பார்க்கலாம்.

சில்க் ஸ்மிதாவின் மறுமக்கம் குறித்து நடிகை டிஸ்கோ சாந்தி பகிர்ந்தவற்றை இங்கு பார்க்கலாம்.

 “எனக்குத் தெரிந்து சினிமாவில் ஜெயமாலினி போல இன்னொரு டான்சர் வர முடியாது. சில்க் ஸ்மிதாவிற்கு டான்சே வராது. ஆனால் அவரிடம் இருக்கும் கிரேஸ், அவர் வெளிப்படுத்தும் முக பாவனைகள் உள்ளிட்டவை வேறு நடிகைகளுக்கு வரவே வராது. ஸ்ரீதேவியை விடவா ஒருவர் ஸ்டைல் பண்ணி விட முடியும். சில்க் ஸ்மிதாவிடம் செக்ஸியான தோற்றம் மட்டுமே நமது கண்ணுக்கு தெரியும். ஆபாசம் நமக்கு தெரியாது. 

உடல்வாக்கும் அதற்கு ஏற்றார் போல இருந்தது. அவரிடம் ஒரு நல்ல வசீகரம் இருக்கும். அவரை அசிங்கமாக பார்க்கத் தோன்றாது. சில்க் ஸ்மிதா உடன் அவர் தயாரித்த சொந்த படங்களில் நடித்தேன். என்னை அவர் ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்வார். அப்போது சில்க்கிற்கு அடுத்ததாக  அனுராதா இருந்தார். அவருக்கு அடுத்து அனுராதாவிற்கு அடுத்து நான்.

அனுராதா சில்க் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் நடனமாடியிருந்தாள். ஆனால் நான் அவருடைய படத்தில் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சிறிய குழந்தையை பார்த்துக் கொள்வது போல பார்த்துக் கொள்வார். காலையில் வரும் போது அவர் சாக்லேட்களை எடுத்து வருவார். 

அவருடைய கணவர், பிள்ளைகள் பற்றி எல்லாம் மனம் திறந்து பேசி இருக்கிறார். ராதா கிருஷ்ணனின் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள்அவர்கள். அவருடைய குணம் மிகவும் நல்ல குணம் ஆனால் அவர் ஏன் வாழ்க்கையை இறுதி காலத்தில் அப்படி செய்து கொண்டார் என்பது எனக்கு தெரியவில்லை. அவரின் இழப்பு சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

அவர் சினிமா துறைக்கு மிகவும் இளம் வயதில் கூட வரவில்லை; 20 வயதுக்கு மேல் தான் அவர் சினிமா துறையில் நுழைந்தார். ஆங்கில வார பத்திரிகைகளைப் படித்துக் கொண்டே இருப்பார் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை எடுத்து தன்னிடத்தில் அவர் புகுத்திக் கொள்வார். அவரிடம் பேசும் போது அவர் உள்ளிருக்கும் குழந்தைத்தனம் அவரை மீறி வெளியே வரும். 

மன்சூர் அலிகான் ஒரு படத்தை தயாரித்து அந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்தார். அந்தப் படத்தில் நானும் சில்க் ஸ்மிதாவும் முதன்முறையாக காம்பினேஷனில் நடித்தோம். முதன்முறையாக நாங்கள் இணைந்த பின்னர் அவர் என்னிடம் வந்து  ‘சாந்தி நான் உன்னை விட நல்லா பண்ணேன் இல்ல’ என்று கேட்டார். நான் அவரைப் பார்த்து நல்லா பண்றீங்க” என்று சொன்னேன்

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி