‘உங்க சமூக நீதியை பேச ஆடியோ வெளியீடு தான் கிடச்சதா?’ இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் காட்டம்!
Aug 17, 2023, 06:50 AM IST
‘தன்னை ஒரு சமூக நீதி போராளியா காட்டுவதற்காக, தங்களின் சிந்தனையை காட்ட, தங்களை பொதுவுடமைவாதியாக காட்டிக் கொள்ள’ இசைவெளியீட்டு விழாவை பயன்படுத்திக் கொள்கிறார்கள்’
சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், கும்பாரி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘ஆர்.வி.உதயக்குமார் சாரும், பாக்யராஜ் சாரும் இங்கு வந்து வாழ்த்தியிருக்கிறார்கள் என்றால், இந்த படக்குழுவினர் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். வளரும் அடுத்த தலைமுறையை வாழ்த்த அவர்கள் இருவருக்கும் நன்றி.
அபி சரவணன் எனக்கு நெருங்கிய நண்பர். இன்று காலை தான், என்னை நிகழ்ச்சிக்கு அழைத்தார். ஒரு வாரமாக தொண்டை ஃஇன்பக்ஷன் இருந்தது, பேச முடியவில்லை. அதனால் வரமுடியாது என்று அவரிடம் கூறினேன். அவர் கட்டாயப்படுத்தியதால், வந்தேன்.
தொடர்ந்து அபி சரவணன், இனிகோ பிரபாகர், சவுந்தர் எல்லாருமே என்னிடம் ஆலோசிப்பார்கள். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள். அவர்களிடம் ஒன்று தான் சொல்வேன், ‘கிடைக்கும் எந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணிடாதீங்க’ என்று தான் சொல்வேன்.
எல்லா கதைகளிலும், உங்கள் கேரக்டர் எப்படி இருக்கு என்று மட்டும் பாருங்கள் என்று கூறுவேன். கமிட் ஆகியிருங்க, திரையில் உங்கள் முகமும், உங்கள் திறமையும் பதிவாகிக் கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அது பதிவாகிறதோ, அந்த அளவிற்கு நீங்கள் ரசிகர்களிடம் போய் சேருவீர்கள்.
ஒரு நாள், உங்களுக்கான நாள் வரும். விக்ரம் சார் 16 ஆண்டுகள் உழைத்தார். அதற்கு முன்பும் அவர் கதையின் நாயகன் தான். ஆனால், அவர் ஹீரோ ஆக 16 ஆண்டு போராடியிருக்கிறார். சேது தான் அவர் வாழ்க்கையை மாற்றியது. உங்களுடைய சேது, எதுவென்று தெரியாது. கண்டிப்பா ஒரு நாள், கமர்ஷியல் ஹீரோவா வருவீங்க.
இசை வெளியீட்டு விழாவில், அந்த படத்தின் இசை சம்மந்தப்பட்டு மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பவன் நான். சமீபத்தில் சில விசயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவிற்கு விருந்தினர்களாக வருபவர்கள், படத்திற்கான விளம்பரத்தை பேச வேண்டும்.
சமீபத்தில் என்ன நடக்கிறது என்றால், எல்லா மேடைகளிலும், ‘தன்னை ஒரு சமூக நீதி போராளியா காட்டுவதற்காக, தங்களின் சிந்தனையை காட்ட, தங்களை பொதுவுடமைவாதியாக காட்டிக் கொள்ள’ இசைவெளியீட்டு விழாவை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இது ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த மேடை அதற்கான மேடை அல்ல. இது அந்த திரைப்படத்தை ஊக்குவிக்கும் மேடை மட்டுமே. நிறைய சீனியர் ஆர்டிஸ்ட், இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அது ரொம்ப வருத்தமா இருக்கு. வளரும் இயக்குனர் நான், நான் யாரை சொல்கிறேன் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இனி இது போன்ற நிகழ்ச்சிக்கு வந்தால், படத்தையும், படத்தின் கலைஞர்களையும் வாழ்த்துங்கள். உங்களுக்கான களமும், மேடையும் வேறு வேறு இடத்தில் இருக்கிறது. அங்கே உங்கள் அரசியலை பேசுங்கள்,’’
என்று அந்த நிகழ்ச்சியில் தடாலடியாக பேசி முடித்தார் எஸ்.ஆர்.பிரபாகரன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்