Sai Pallavi: நோ.. நோ.. வராதீங்க.. சாய் பல்லவியிடம் கறாராக பேசிய இயக்குநர் செல்வராகவன்!
Jul 27, 2024, 01:01 PM IST
Sai Pallavi: செல்வகாரவன், நடிகை சாய் பல்லவியிடம் என். ஜி. கே படத்தின் படப்பிடிப்பில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அப்படத்தில் நடித்த நடிகை, உமா பேசி உள்ளார்.
Sai Pallavi: தென்னிந்தியாவில் அதிகம் விரும்பம்படும் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. பிரேமம் படத்திலிருந்து மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து உள்ளார். திறமையான நடிகை கடைசியாக வலம் வரும் இவர் தனக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்து இருக்கிறார்.
செல்வராகவனுடன் சூர்யா இணைந்து நடித்த முதல் படம் என். ஜி. கே. படம் வெளியானதும் கலவையான பதில்களைப் பெற்றது. தென் கொரியாவில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.
இந்நிலையில் செல்வகாரவன், நடிகை சாய் பல்லவியிடம் என். ஜி. கே படத்தின் படப்பிடிப்பில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அப்படத்தில் நடித்த நடிகை, உமா பேசி உள்ளார்.
இது தொடர்பாக அவர், சித்ரா லட்சமணனின், Touring Talkies யூ-டியூப் சேனலில் பேசுகையில், “ மற்ற இயக்குநர்கள் தனக்கென ஒரு மானிட்டர் வைத்து குறிப்பிட்ட சீன் நடித்து முடிந்த பின்னர் ஹீரோ, ஹீரோயின்களை அழைத்து பார்க்க அனுமதி கொடுப்பார்கள்.
மானிட்டர் பக்கம் அனுமதி இல்லை
ஆனால் இயக்குநர் செல்வராகவன் அப்படி இல்லை. அவர் மானிட்டர் பக்கம் யாரையும் அனுமதிக்கமாட்டார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் தன் மானிட்டர் பக்கம் மட்டும் யாரையும் அனுமதிக்கமாட்டார்.
அந்த வகையில் ஒரு முறை சாய் பல்லவி என். ஜி. கே படத்தின் படப்பிடிப்பு போது மானிட்டரில் தன் முகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க சீன் முடிந்தவுடன் சென்று எட்டி பார்க்க நின்றார்.
நோ நோ இது என்னுடையது
உடனே செல்வராகவன், நோ நோ இது என்னுடையது. இப்படி எட்டி பாக்குற வேலையெல்லாம் இங்க வைச்சுக்கவே கூடாது. யாரும் இங்கே வரக்கூடாது என சொல்லி சாய் பல்லவியை அனுப்பி விட்டார் “ என்றார்.
முன்பு இந்த படத்தில் நடித்தது தொடர்பாக பேசிய சாய் பல்லவி, “ நான் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து கொண்டிருந்த போது எஸ்.ஆர்.பிரபு சார் என்னை அழைத்தார். அப்போது, செல்வராகவன் சாரிடம் கதை சொல்ல அழைத்தார்கள். ஸ்கிரிப்ட் எனக்குப் பிடித்திருந்தது, உடனே ஒப்புதல் அளித்தேன். படத்தில் ரகுல் ப்ரீத் உட்பட இரண்டு பெண் கதாபாத்திரங்கள் இருப்பதால் அவர்கள் என்னிடம் மீண்டும் கேட்டார்கள்.
புதிய கதவு திறந்தது
எங்கள் இருவருக்கும் கதையில் முக்கிய வேடங்கள் இருந்ததால், அது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. “ஒரு காட்சியில் நடிக்கும் போது நடிகர்கள் கண் சிமிட்டுவது செல்வா சார்க்கு பிடிக்காது. அழும்போது கூட, ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிக்கொணர வேண்டும் என சொல்லுவார். ஒரு நடிகனாக எனக்கு புதிய கதவுகளை திறந்து வைத்தவர்.
இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு, செல்வா சாரின் சினிமா பள்ளியில் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று புரிந்து கொண்டேன். மற்ற படங்களின் படப்பிடிப்பின் போது, நாங்கள் எங்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்துவோம். ஆனால் செல்வா சாரின் செட்டில் எல்லாரும் டயலாக் பேப்பருடன் நின்று அடுத்த காட்சிக்கு தயாராகி விடுவார்கள் “ என்றார்
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்