ஏழு முறை தற்கொலைக்கு முயன்றேன்! உள்ளே ஒரு குரல் கேட்கும்! தீர்வு சொன்ன செல்வராகவன்!
Oct 28, 2024, 03:42 PM IST
சமீப காலமாக இயக்குனர் செல்வராகவன் அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் சில நம்பிக்கையூட்டும் வீடியோக்களையும் பொது நிகழ்வுகளில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை பேசியும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் கடந்த 2002 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இயக்குனர் செல்வராகவன் இவர் 7g ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக 2022 ஆம் ஆண்டு நானே வருவேன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இதுவே அவர் கடைசியாக இயக்கிய படமாகும். இப்படத்தில் அவரது சகோதரர் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் படம் இயக்குவதை சிறிது காலம் தள்ளி வைத்து சில படங்களில் நடித்தும் வந்தார்.
மேலும் சமீப காலமாக இயக்குனர் செல்வராகவன் அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் சில நம்பிக்கையூட்டும் வீடியோக்களையும் பொது நிகழ்வுகளில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை பேசியும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்நிலையில் செல்வராகவன் இன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தற்கொலை எண்ணங்களில் இருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து விளக்கியுள்ளார். மேலும் தானும் ஏழு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்கொலை எண்ணத்தை தவிர்த்து விடுங்கள்
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், 'உலகில் வாழும் அனைவருக்கும் இந்த இரண்டு நிலையை கடக்காமல் இருக்கவே மாட்டார்கள். அதில் ஒன்று தற்கொலை முயற்சி, மற்றொன்று மன அழுத்தம் ஆகியவை ஆகும். இந்த இரண்டு நிலையை நானும் அனுபவித்து உள்ளேன். பல வருடங்களுக்கு முன் நானே 7 முறை தற்கொலைக்கு முயன்று உள்ளேன்.
ஒவ்வொரு முறையும் தற்கொலைக்கு முயற்சி செய்யும் போதும், நமது மனதிற்குள் ஒரு குரல் கேட்கும், அந்த குரல் நம்மிடம் ஏதோ சொல்வது போல், நம்மிடம் ஏதோ கேக்குற மாதிரி ஒரு உணர்வு இருக்கும். இந்த எண்ணத்தை கடந்து வந்த பின் 10 நாட்கள் கழித்தோ அல்லது ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்துக் கூட வாழ்க்கை திடீரென மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நாம் ஆசைபட்டது போல மாறலாம். அப்போது, தற்கொலை செய்து கொண்டிருந்தால் எல்லாமே போயிருக்குமே என்று நான் நினைப்பேன்.
உள்ளே கேட்கும் குரல்
நமது வாழ்க்கையே இது தான். ஒரு வேளை நாம் தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்து கொண்டு இருந்தால், அடுத்த ஜென்மத்தில் நாம் விரும்பியவாறு எங்கோ ஸ்விட்ச்சர்லாந்தில் பிறப்போம் எனவும், நாம் விரும்பிய வசதிகளுடன் வாழலாம் என எண்ணுகின்றனர். ஒரு வேளை அவ்வாறு பிறக்காமல் ஒரு பன்னியாகவோ, காட்டில் பேயாகவும் பிறந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. எனவே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு நமது மனதிற்குள் கேட்கும் குரலின் ஓசையை கேட்க வேண்டும்.
நம் மனதினுள் கேட்கும் அந்த குரல் கடவுளின் குரலாகவோ அல்லது வேறு யாரின் குரலாகவோ இருக்கலாம். என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஆனால் அந்த குரல் கேட்காமல் இருக்காது. இது உண்மையானது என்று இயக்குனர் செல்வராகவன் தற்கொலை எண்ணம் குறித்து அந்த வீடியோவில் பேசி உள்ளார். ஆனால், தற்போது அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்