HBD Director Priyadarshan: எதார்த்தங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த பிரியதர்ஷன்..பிறந்தநாள் ஸ்பெஷல்!
Jan 30, 2024, 05:50 AM IST
இயக்குநர் பிரியதர்ஷன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இயக்குநர் பிரியதர்ஷன் இன்று தனது 65 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரியதர்ஷன் 1957 ஜனவரி 30 அன்று பிறந்தார். பிரியதர்ஷன் கல்லூரியில் இருந்தே படிப்பில் மிகவும் திறமையானவர். அவருடைய தந்தை ஒரு நூலகராக இருந்ததே இதற்குக் காரணம்.
பிரியதர்ஷன் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், அவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். 1980களில் மலையாள சினிமாவில் தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியதர்ஷன் பாலிவுட்டில் பல படங்களில் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
பாலிவுட் துறையில் பல படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். அவர் தனது பாலிவுட் வாழ்க்கையை 1999 ஆம் ஆண்டு ஹேரா பெரி படத்தின் மூலம் தொடங்கினார். சிறிது நேரத்தில் நகைச்சுவைப் படங்களின் மன்னனாக மாறினார் இயக்குநர் பிரியதர்ஷன்.
ஹேரா பெரி படத்தில் அக்ஷய் குமார், பரேஷ் ராவல், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அதிசயங்களைச் செய்தது, இது இன்னும் மக்களை சிரிக்க வைக்கிறது. இந்த படத்தில், அக்ஷய் குமார் மற்றும் சுனில் ஷெட்டியுடன் பரேஷ் ராவல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மனோதத்துவவியலில் முதுகலை முடித்த இவர் திரைத் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் சினிமாவிற்குள் நுழைந்தார். இளமைக் காலத்திலேயே மலையாளத்தில் முக்கிய நடிகர்களாக இருந்த மோகன்லால் சுரேஷ்குமார் அசோக் குமார் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார்.
வாய்ப்புகள் தேடி சென்னை நோக்கி பயணம் செய்த இவர் நண்பர்களின் உதவியால் 1984 ஆம் ஆண்டு பூச்சாக்கொரு மூக்குத்தி திரைப்படத்தை இயக்கினார். 100 நாட்களுக்கு மேல் ஓடி கேரளத் திரையுலகத்தையே கலக்கியது.
மலையாளத்தில் பல படங்களை இயக்கி வெற்றிக்கொடியை நாட்டினார் இவர். தமிழில் நடிகர் கார்த்தியைக் கதாநாயகனாக வைத்து கோபுர வாசலிலே என்ற திரைப்படத்தின் மூலம் அடி எடுத்து வைத்தார். இந்த படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியை கண்டது.
நடிகை ஜோதிகாவை வைத்து பெண்களை மையமாகக் கொண்டு சினேகிதியே என்ற திரைப்படத்தை இயக்குநர் இந்த திரைப்படமும் வெற்றி கண்டது. பின்னர் நடிகர் ஷியாம், த்ரிஷா, மாதவன் என அப்போதிருந்த இளம் நடிகர்களை வைத்து லேசா லேசா என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்று வரை இளைஞர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.
பிரகாஷ் ராஜை வைத்து காஞ்சிவரம் என்ற திரைப்படத்தை உருவாக்கினார். மகளுக்காகத் தந்தை படும் பாட்டை உணர்வு ரீதியாக எடுத்துரைக்கும் கதையாக அமைந்திருந்தது. இப்படத்திற்குத் தேசிய விருதும் கிடைத்தது.
தற்போது இவருடைய மகள் கல்யாணி பல திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மக்களின் உணர்வுகளைப் புரிந்து அதற்கு ஏற்ற படங்களை கொடுத்து வெற்றி கண்ட இயக்குநர்களின் இவரும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது.
ஜனவரி 30 ஆம் தேதி அன்று தனது 66 ஆவது பிறந்த நாளை இயக்குநர் பிரியதர்ஷன் கொண்டாடி வருகிறார். நல்ல கலைஞர்களுக்குத் தேவை ரசிகர்களின் வாழ்த்து தான் எனவே இயக்குநர் பிரியதர்ஷனுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்