Director Perarasu: ‘நடிகையை பார்த்து ஐட்டம்னு.. எவ்வளோ வாங்குனா வாங்கலன்னு..’ -பேரரசு பரபர பேச்சு!
Mar 04, 2024, 09:04 AM IST
‘இந்த மாதிரியான படங்கள் வர வேண்டும் என்றால் ஆர்கே சுரேஷ் போன்ற நடிகர்கள் இங்கு வேண்டும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் அப்போது தான் திரை உலகம் நன்றாக இருக்கும்.’ - பேரரசு!
இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் காடு வெட்டி. இந்தத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, “தளபதி, ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு கூடும் கூட்டமானது ரசிகர் கூட்டம். ஆனால் இங்கு காடுவெட்டிக்கு கூடியிருக்கக் கூடிய கூட்டமானது உணர்வுபூர்வமானது.
நடிகர் பிரசாந்தினுடைய அப்பா தியாகராஜன் மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில் நடித்த பிறகு, மிகப்பெரிய ஹீரோவாக மாறிவிட்டார். அதேபோல நடிகர் நெப்போலியன் சீவலப்பேரி பாண்டி படத்தில் நடித்த பின்னர், பிரபலமான நடிகராக உயர்ந்தார். அதே போல ஆர்.கெ.சுரேஷூம் வருவார்.
இந்த மாதிரியான படங்கள் வர வேண்டும் என்றால் ஆர்கே சுரேஷ் போன்ற நடிகர்கள் இங்கு வேண்டும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் அப்போது தான் திரை உலகம் நன்றாக இருக்கும்.
காடுவெட்டி ஒரு காதல் விழிப்புணர்வு திரைப்படம். ஜாதி மதம், ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காமல் காதலிப்பது தான் புனிதமான காதல். இந்த ஜாதி பெண்ணை தான் நாம் திருமணம் செய்ய வேண்டும். அவளுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது உள்ளிட்டவற்றையெல்லாம் பார்த்து காதலிப்பது உண்மையான காதல் இல்லை. அதை அடையாளம் காண வேண்டும். அந்த புரட்சியை ஆரம்பித்தவர் இயக்குநர் மோகன் ஜி.
யாரையும் காதல் செய்யக்கூடாது. அப்பா, அம்மா பார்த்து வைத்த மாப்பிள்ளையையோ, பெண்ணையோ தான் காதல் செய்ய வேண்டும் என்று சொன்னால் தான் நாம் கொஞ்சம் பழமையாக இருக்கிறோம் என்று அர்த்தம். நாம் அப்படி சொல்லவில்லை. இந்த பெண்ணைதான் குறி வைத்து காதல் செய்வேன் என்று சொல்ல அந்தப் பெண் என்ன மீனா!
பலரும் பெண்கள் எல்லோரும் முன்னேறி விட்டார்கள் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வந்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். அதெல்லாம் உண்மையில் பொய். சினிமா துறையிலே பெண்களை அவ்வளவு கீழ்த்தரமாக நடத்துகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை கொடுத்திருக்கிறோம் என்று சொல்லும் அரசியல்வாதிகளே நடிகைகளை ஐட்டம் என்று அழைக்கிறார்கள்.
திரை உலகில் ஒரு பெண்ணுக்கு அவமானம் நேர்ந்தால் நாம் எல்லோருமே குரல் கொடுக்க வேண்டும். கண்டனம் தெரிவிக்க வேண்டும். இங்கு கூவத்தூர் விஷயம் எல்லோருக்குமே நன்றாக தெரிந்தத கதைதான். அந்த விவகாரத்தில் கூவத்தூர் சம்பவத்தை விட, அங்கு நடிகை ஒருவர் சென்று வந்தார் என்பது தான் பரபரப்பாக பேசப்பட்டது. அவர் அங்கு சென்றாரா? இல்லையா? இவ்வளவு ரூபாய் வாங்கி இருக்கிறாரா வாங்க வில்லையா என்று பேசுகிறார்கள். இது கேடு கெட்ட உலகம்” என்று பேசினார்.
டாபிக்ஸ்