தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mari Selvaraj: ‘என்னுடைய சினிமா கேரியரில் பாய்ச்சலாக இருக்கும்’-தனுஷ் படம் பற்றி மாரிசெல்வராஜ்!

Mari Selvaraj: ‘என்னுடைய சினிமா கேரியரில் பாய்ச்சலாக இருக்கும்’-தனுஷ் படம் பற்றி மாரிசெல்வராஜ்!

Apr 19, 2023, 04:57 PM IST

google News
நானும்,தனுஷூம் அடுத்ததாக இணையும் திரைப்படம் என்னுடைய அடுத்தக்கட்ட பாய்ச்சலாக இருக்கும் என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியிருக்கிறார்
நானும்,தனுஷூம் அடுத்ததாக இணையும் திரைப்படம் என்னுடைய அடுத்தக்கட்ட பாய்ச்சலாக இருக்கும் என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியிருக்கிறார்

நானும்,தனுஷூம் அடுத்ததாக இணையும் திரைப்படம் என்னுடைய அடுத்தக்கட்ட பாய்ச்சலாக இருக்கும் என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியிருக்கிறார்

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியதின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ்; தொடர்ந்து தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார்; இந்த இரண்டு படங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நிகழ்த்தும் அடக்குமுறையை அவர் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அண்மையில் மீண்டும் தனுஷூடன் மாரிசெல்வராஜ் இணைய இருப்பதாகவும், அந்த திரைப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த திரைப்படம் குறித்து மாரிசெல்வராஜ் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “ தனுசுடன் கர்ணன் படத்திற்கு அடுத்தபடியாக உடனே இணைவது முன்பே திட்டமிட்டது தான்; ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது தள்ளிப்போனது. இந்த திரைப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது என்பதுதான் எனக்கு இதில் மிகவும் சந்தோஷமான விஷயம். அது நானே எதிர்பார்க்காத அப்டேட்.

அடுத்ததாக விக்ரமின் மகனான துருவ் நடிக்கக்கூடிய படத்தை நான் தொடங்க இருக்கிறேன்; அந்த படத்தை முடித்த பிறகு தனுஷ் நடிக்கும் அந்த படத்தை இயக்க இருக்கிறேன். தனுஷ் அவர்களோடு நான் இணையக்கூடிய அந்த திரைப்படம் நிச்சயம் என்னுடைய சினிமா கேரியரில் ஒரு பாய்ச்சலாக இருக்கும். இவ்வளவு நாள் தாமதமானதற்கான காரணமும் அதுதான். அது ஒரு வரலாற்றுப் படம். படத்தை எடுப்பதற்கு எனக்கே ஒரு சிறு பயம் இருந்தது; காரணம் அந்த அளவுக்கு நான் அந்த கதைக்கு மெச்சூரிட்டியாக ஆக வேண்டிய சூழ்நிலை இருந்தது. தனுஷ் அவர்களுடன் இணைகிறேன் என்றால்,  அது கர்ணனை விட இன்னொரு படி மேலே இருக்கக்கூடிய ஒரு படமாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். நானும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். தனுஷ் சார் என்னை மிகவும் நம்புகிறார். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இது இருக்கும்” என்று பேசினார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை