Irumban Movie:சந்திக்கு வந்த ஜூனியர் MGR பட பிரச்சினை; கதறி அழுத இயக்குநர்!
Mar 11, 2023, 10:18 AM IST
பத்திரிகையாளர் முன்னிலையில் இரும்பன் படத்தின் இயக்குநர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
லெமுரியா மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜூனியர் எம்.ஜி.ஆர், யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா உள்ளீட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘இரும்பன்’
இந்த படத்தை இயக்குனர் கீரா இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முன்னதாக கடந்த புதன் கிழமை இந்த படத்தின் இயக்குநர் கீரா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த படத்தில் கமிட் ஆகும் முன்னர் தனக்கு 20 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாகவும், ஆனால் தனக்கு தற்போது வரை 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளதாகவும் கூறி மனுதாக்கல் செய்தார்.
மேலும் அந்த மனுவில் பாக்கி சம்பள தொகையை வழங்காமல் படத்தை திரையரங்கு, டிஜிட்டல், ஓடிடி போன்ற எந்த தளத்திலும் வெளியிட தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனநக்கு செலுத்த வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் கட்ட வேண்டுமென்றும், தவறினால் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இந்த நிலையில் அந்த இயக்குநர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது, “ பத்திரிகையில் வரும் படம் போஸ்டரில் கூட, இயக்குநர் என்ற முறையில் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. நான் 25 வருடம் சினிமாவில் இருக்கிறேன். தேவையில்லாமல் என்னுடைய பெயரை அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் கெடுக்கிறார்கள்.
மிகவும் கேவலமான, அறுவறுக்கத்தக்க செயலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.. யாருடா நீங்களெல்லாம்.. நான் மட்டுமல்ல.. என்னுடைய உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர், படத்தில் வேலை பார்த்த மேனஜர் உள்ளிட்ட யாருக்கும் சம்பளம் கொடுக்க வில்லை.. 4 ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் எப்படி ஒரு இயக்குநராக அலைந்திருப்பேன் என்று நினைத்து பாருங்கள்” என்று கூறி கதறி அழுதார்.
டாபிக்ஸ்