Bhagyaraj: ‘தனுஷ் மாதிரி.. விஜய் மாதிரி வேண்டவே வேண்டாம்..’ பாக்யராஜ் நெத்தியடி பேச்சு!
Aug 20, 2023, 09:00 AM IST
‘16 வயதினிலே வரும் போது, அதில் இருந்த எல்லாரும் பிரமாதமா வந்தோம். எனக்கு அந்த ஃபீல் இந்த படத்தில் கிடைக்கிறது’
ரங்கோலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் பாக்யராஜ், நிகழ்ச்சியில் பேசியதாவது:
ரங்கோலி படத்தின் பாடல்களை பார்க்கும் போது, எனக்கு பழைய ப்ளாஷ்பேக் நிறைய தோன்றுகிறது. பள்ளியை பற்றிய படங்கள் என்றால், இனிமையானது தான். நான் படிக்கும் போது வாத்தியரை பாடமே எடுக்க விட மாட்டேன். ஏதாவது ஒன்னு பண்ணிட்டே இருப்பேன்.
ஆசிரியர்களுக்கு என் மீது ஒரே கோபம். என் வகுப்பில் மாணவர்கள் தனியாக, மாணவிகள் தனியாக அமர்ந்திருப்போம். திடீர் ஒரு நாள், என்னை அழைத்த ஆசிரியர், மாணவிகளுக்கு நடுவில் உட்கார வைத்துவிட்டார். அவர் எனக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்தார். ஆனால், அது எனக்கு சவுகரியமாக இருந்தது என்பது அவருக்கு தெரியவில்லை.
மாணவிகள் கொண்டு வரும் தின்பண்டங்கள் எல்லாம் ஜாமுன்ட்ரி பாக்ஸில் இருக்கும். அதை எடுத்து சாப்பிட்டு விடுவேன். மறைத்து வைத்திருப்பதால், அதை புகாராகவும் மாணவிகளால் கொண்டு செல்ல முடியவில்லை. அதுவே ஒரு ஜாலியாக இருந்தது.
மாணவிகளையும் தொல்லை செய்ததால், ‘எங்கே உட்கார வைத்தாலும் நீ எல்லாரையும் தொல்லை பண்ணுவட’ என்று ஆசிரியர் நொந்து கொண்டார். இந்த படத்தை எந்த டைப்பில் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாது.
படத்தில் நடித்தவரை பார்த்து, தனுஷ் மாதிரி, விஜய் மாதிரி என்று பேசுபவர்கள் சொன்னார்கள். தயவு செய்து, நீ நீயா இரு என்று தான் நான் அந்த பையனிடம் கூறுவேன். அந்த மாதிரி, இந்த மாதிரி என்று சொல்லும் போது, நீ நடிக்கும் போது உன்னை அறியாமல் அவர்களைப் பற்றியது உன்னிடம் உன்னை அறியாமலேயே எதிரொலிக்கும். எனவே அது வேண்டாம்.
அம்ரிஸ், அம்ரிஸாக தான் இருக்க வேண்டும். நீ, நீயாவே இரு. 16 வயதினிலே வரும் போது, அதில் இருந்த எல்லாரும் பிரமாதமா வந்தோம். எனக்கு அந்த ஃபீல் இந்த படத்தில் கிடைக்கிறது,’’
என்று அந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்