தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘சிந்து பைரவி க்ளைமாக்ஸை அம்மா தான் மாற்றினார்’ -பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி!

‘சிந்து பைரவி க்ளைமாக்ஸை அம்மா தான் மாற்றினார்’ -பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி!

Jan 08, 2023, 06:15 AM IST

google News
Pushpa Kandaswamy Interview: ‘அனந்து சார்-அப்பா இவர்களை தவிர வேறு யாரும் அவருடைய கதை விவாதத்தில் தலையிட முடியாது. அவர்கள் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. எங்களிடம் அப்பா ஆலோசனை செய்த ஒரே படம், சிந்து பைரவி தான்’- புஷ்பா கந்தசாமி!
Pushpa Kandaswamy Interview: ‘அனந்து சார்-அப்பா இவர்களை தவிர வேறு யாரும் அவருடைய கதை விவாதத்தில் தலையிட முடியாது. அவர்கள் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. எங்களிடம் அப்பா ஆலோசனை செய்த ஒரே படம், சிந்து பைரவி தான்’- புஷ்பா கந்தசாமி!

Pushpa Kandaswamy Interview: ‘அனந்து சார்-அப்பா இவர்களை தவிர வேறு யாரும் அவருடைய கதை விவாதத்தில் தலையிட முடியாது. அவர்கள் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. எங்களிடம் அப்பா ஆலோசனை செய்த ஒரே படம், சிந்து பைரவி தான்’- புஷ்பா கந்தசாமி!

பாலசந்தரின் மகளும், கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான புஷ்பா கந்தசாமி, சமீபத்தில் இணையதளம் ஒன்றில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரது தந்தை பற்றியும், தங்களின் வாழ்க்கை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பேட்டி:

‘‘பெரிய சாதனையாளர்களின் மகளாகவோ, மகனாகவோ இருப்பது சிரமம் தான். அவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். பிரபலத்தின் பிம்பத்தை அவர்களின் வாரிசுகள் மீதும் எதிர்பார்ப்பார்கள். அது கொஞ்சம் கஷ்டமானது தான்.

அது சுகமா? சுமையா? என்று பார்த்தால், இரண்டுமே சரிசமம் தான். சின்ன வயதில் அப்பா பெரிய இயக்குனர். அது பெறுமையாக இருக்கும். பின்னாளில் நமக்குனு ஒரு துறையை தேர்வு செய்ய முயற்சிக்கும் போது, இந்த பிரச்னை வரும்.

நம்ம திறமை எனும் வரும் போது, அந்த பிரச்னை வரும். என்னை விட தம்பிக்கு அதில் நிறைய பிரச்னைகள் வந்திருக்கிறது. அந்த காலத்தில் மகளை விட மகன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். நான் நன்றாக கதை எழுதுவேன். அப்பா என்னை கதாசிரியராக ஆக்கியிருக்கலாம். என் குறைகளை சரிசெய்ய அவருக்கு நேரம் இல்லை. அப்பா ரொம்ப பிஸியாக போய் கொண்டிருந்தார்.

அப்பா கவிதாலயா ஆரம்பித்ததால், என் திருமணத்திற்கு பிறகு, ‘ஏன் இதற்குள் நாம் பணியாற்றக்கூடாது’ என முடிவு செய்தேன். அப்போது தயாரிப்பு மேற்பார்வையாளராக இருந்த நடராஜன் தான் அந்த ஐடியாவை கொடுத்தார்.

இயக்குனர் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி  -கோப்புபடம்

வெளியில் போய் சாதிப்பதை கவிதாலயாவில் சாதிக்க சொன்னார். அப்பா கொஞ்சம் கடுமையானவர். அவரிடம் அனுமதி வாங்கி அதன் பின் சேர்ந்தேன். நிர்வாகத்துறையில் அதன் பின் இணைந்துவிட்டேன். நான் எழுதும் கதைகளை விகடன், தாய், சாவி, கல்வி ஆகியவற்றிக்கு அனுப்புவேன்.

வெளியான பிறகு தான் அப்பாவிடம் அந்த கதைகளை காட்டுவேன். அனந்து சார்-அப்பா இவர்களை தவிர வேறு யாரும் அவருடைய கதை விவாதத்தில் தலையிட முடியாது. அவர்கள் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. எங்களிடம் அப்பா ஆலோசனை செய்த ஒரே படம், சிந்து பைரவி தான்.

சிந்து பைரவி க்ளைமாக்ஸ் சரியா இருக்குமா என்று எங்களிடம் கேட்டார். என் அம்மா ஒரு கருத்து சொன்னாங்க, நான் ஒரு கருத்து சொன்னேன். ஜே.கே.பி.,யும் சிந்துவும் சேரலாமா? என்பது தான் கேள்வி. சேரக்கூடாது என்று தான் நாங்கள் கூறினோம். பெண்குலத்திற்கு அது சரியல்ல என்று கூறிவிட்டோம். அம்மாவும் பைரவிக்கு தான் ஆதரவு தந்தார். அது தான் இயற்கையும் கூட. மற்றபடி படங்களில் அப்பா எடுக்கும் முடிவு தான். அது தவறு என்றாலும், அதை அவர் எதிர்கொள்வார்,’’

என்று அந்த பேட்டியில் புஷ்பா கந்தசாமி கூறியுள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி