தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Exclusive: ‘அவர் கூட 2 மணி நேரம் கூட தாங்காதுன்னு சொன்னாங்க; Sp ஜனநாதன் இல்லாத இடத்தை வெற்றிதான்; நெகிழ்ந்த அமீர்!

HT Exclusive: ‘அவர் கூட 2 மணி நேரம் கூட தாங்காதுன்னு சொன்னாங்க; SP ஜனநாதன் இல்லாத இடத்தை வெற்றிதான்; நெகிழ்ந்த அமீர்!

Jun 07, 2023, 07:16 AM IST

google News
வெற்றிமாறனுக்கும் தனக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி இயக்குநர் அமீர் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கு பிரத்யேகமாக பகிர்ந்தவற்றை இங்கு பார்க்கலாம்.
வெற்றிமாறனுக்கும் தனக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி இயக்குநர் அமீர் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கு பிரத்யேகமாக பகிர்ந்தவற்றை இங்கு பார்க்கலாம்.

வெற்றிமாறனுக்கும் தனக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி இயக்குநர் அமீர் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கு பிரத்யேகமாக பகிர்ந்தவற்றை இங்கு பார்க்கலாம்.

தமிழ்சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர் இயக்குநர் அமீர். இயக்குநராக உச்சம் தொட்ட அவர், நடிகராக அவதாரம் எடுத்து அதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது மற்றொரு அவதாரமாக பிசினஸிலும் கால் பதித்திருக்கிறார்.

அமீரின் கடை!

ஆம் கிழக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், மாயாஜால் சினிமாஸ் அருகே 4 am coffee & kitchen என்ற ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்த ஹோட்டலை இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் சூரியும் அண்மையில் திறந்து வைத்தனர். இது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.. பரபரவென பிஸியாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தவர் கார் பயணமொன்றில் நேரம் ஒதுக்கி பேசினார். அப்போது தனக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி அவர் பேசியதாவது, “

அவரும் கிட்டத்தட்ட என்ன மாதிரி மனநிலை உள்ளவர் தான். . நாங்க ஒருவருக்கொருவர் பாராட்டிக்கிறதும் கிடையாது. ஒருத்தரோட நிலைமையைப் பார்த்து இன்னொருத்தர் பொறாமைப்படுறதும் கிடையாது.அதே போல அவர்கிட்ட இருந்து நானோ.. என்கிட்ட இருந்து அவரோ எதையும் எதிர்பார்க்குறது கிடையாது. வடசென்னையிலதான் எனக்கும் வெற்றிக்குமான நட்பு தொடங்குச்சு. வடசென்னை ராஜன் கேரக்டர்ல என்னை அப்ரோச் பண்றதுக்கு முன்னாடி சமுத்திரக்கனி, சுபரமணிய சிவா, கலை இயக்குநர் ஜாக்ஸன் போன்றவர்களிடம் என்ன பத்தி வெற்றி விசாரிச்சிருக்காரு.

அப்போ அவங்க உங்களால அமீர் கூட 2 மணி நேரத்துக்கு மேல தாங்க முடியாதுன்னு அவங்க அனுபவத்தை சொல்லிருக்காங்க. ஆனாலும் அவர் என்னை அவர் படத்துக்காக அப்ரோச் பண்ணாரு. நான் கதை கேட்காம ஓகே சொன்னேன். அது அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. காரணம் வெற்றிமாறன் அப்படிங்கிற டைரக்டர் மேல எனக்கு பெரிய நம்பிக்கை இருந்துச்சு. நான் ஷூட்டிங் ஸ்பாட் போன பிறகும், நான் இரண்டு நாளுக்கு மேல வெற்றி கூட தாங்க மாட்டேனுதான் எல்லாரும் நினைச்சாங்க.

வெற்றிமாறன் சூரி அமீர்

ஆனா நான் ஒரு நடிகரா அவர்கிட்ட என்னை ஒப்படைச்சிட்டேன். அதனால அவர் என்னை இன்னும் கேரிங்கா பாத்துக்கிட்டாரு. அந்தப் புரிதல் தான் எங்க இருவரையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போச்சு. இப்பவும் நான் வெற்றிமாறன்ட்ட வியந்து பார்க்குறது நாம என்ன சொன்னாலும் அத காது கொடுத்து கேட்குறது தான். நானும் அது போலத்தான்.

அமீர்

வடசென்னையிலிருந்து அவர் என்ன படம் எடுத்தாலும் எனக்கு போட்டு காமிப்பாரு. என்னோட படங்களை நான் அவருக்கு போட்டு காமிப்பேன். இரண்டு பேருமே கருத்துக்கள பரிமாறிக்கிறோம். ஏத்துக்குறோம். இயக்குநர் கரு.பழனியப்பனுக்குப் பிறகு என்னை சரியாக புரிந்து கொண்டவர் வெற்றிமாறன் தான். என்னுடன் SP ஜனநாதன் இல்லாத இடத்தை இப்போது வெற்றி நிரப்புகிறார்.” என்று அவர் அதில் பேசினார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி