தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆட்சியிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு! விஜய்க்கு வாழ்த்து கூறிய பா ரஞ்சித்!

ஆட்சியிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு! விஜய்க்கு வாழ்த்து கூறிய பா ரஞ்சித்!

Suguna Devi P HT Tamil

Oct 28, 2024, 07:35 AM IST

google News
தமிழக வெற்றிக் கழக்கத்தின் முதல் மாநாடு நேற்று நடந்து முடிந்த நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் விஜயின் பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக்கத்தின் முதல் மாநாடு நேற்று நடந்து முடிந்த நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் விஜயின் பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக்கத்தின் முதல் மாநாடு நேற்று நடந்து முடிந்த நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் விஜயின் பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி இருந்தார். கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தி இருந்தார். மேலும் அதன் மாநாட்டை பிரமாண்டமாக நேற்று (அக்டோபர் 27)விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி சாலையில் நடத்தி முடித்துள்ளார். இந்த மாநாட்டில் பல அரசியல் கட்சிகளை எதிர்த்து வெளிப்படையாக பேசி எங்களது எதரி யார் எனவும் உறுதியாக பேசியுள்ளார். இந்த நிலையில் விஜய் மாநாடு தொடங்குவதற்கு முன் பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது மாநாடு முடிந்த பின் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு

தவெக கட்சியின் மாநாடு நேற்று நடந்ததை ஓட்டி அதில் பேசிய தவெக தலைவர் விஜய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களுடைய கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு உண்டு என கூறியுள்ளார். இது நேரடியாக திமுகவை தாக்குவது போல் உள்ளது. ஏனெனில் சமீபத்தில் விசிகவினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்ட போது அதற்கு திமுகவினர் தரவில்லை என்றுஒரு விவாதம் உலாவிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தங்களோடு கூட்டணி வைக்கவே விஜய் இப்படி பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிகமாக ஆனார். அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் கபாலி, காலா என தொடர்ந்து தற்போது தங்கலான் வரை முழுக்க சமூகநீதி கொள்கையை மையமாக வைத்தே படங்களை இயக்கி வருகிறார். ஜாதிய பாகுபாடு இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கூறிவரும் படங்களை எடுத்து வரும் ரஞ்சித் தற்போது விஜயின் மாநாட்டு பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கொள்கையை மேற்கோள்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது X தளத்தில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

பா ரஞ்சித் அவர்கள் மாநாட்டில் விஜய் பேசும் கொள்கைகளின் அடிப்படையில் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என கொள்கை பேச்சு முடிந்தவுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் சமூக நீதி என்கிற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திராவிட மாடல அரசு திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும் தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியிருந்தார் இந்நிலையில் ஆரஞ்சி இவ்வாறு தெரிவித்திருப்பது தவெக கட்சிக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் இருந்து வரும் இரு பெரும் கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் எனவும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். மேலும் வரணாசிரம கொள்கையை முற்றிலும் எதிர்ப்பதாகவும் விஜய் வெளிப்படையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி