தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: சினிமாவுக்கு நான் செட் ஆக மாட்டேனா?;நம்ப மறுத்த அப்பா; உதயம் தியேட்டர் செய்த மேஜிக்; விஜய் விஸ்வரூபம் எடுத்த கதை!

Vijay: சினிமாவுக்கு நான் செட் ஆக மாட்டேனா?;நம்ப மறுத்த அப்பா; உதயம் தியேட்டர் செய்த மேஜிக்; விஜய் விஸ்வரூபம் எடுத்த கதை!

Sep 20, 2024, 03:34 PM IST

google News
Vijay: விஜய் தொடர்ந்து, தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சந்திரசேகர் எப்படி உன்னை நம்ப முடியும். எங்களுக்கு ஏதாவது நடித்துக் காண்பி என்று கேட்டிருக்கிறார். -
Vijay: விஜய் தொடர்ந்து, தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சந்திரசேகர் எப்படி உன்னை நம்ப முடியும். எங்களுக்கு ஏதாவது நடித்துக் காண்பி என்று கேட்டிருக்கிறார். -

Vijay: விஜய் தொடர்ந்து, தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சந்திரசேகர் எப்படி உன்னை நம்ப முடியும். எங்களுக்கு ஏதாவது நடித்துக் காண்பி என்று கேட்டிருக்கிறார். -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், அரசியலில் ஈடுபட போவதால், இன்னும் ஒரு படம் மட்டும் நடித்துக்கொடுத்து விட்டு, சினிமாவில் இருந்து விலகி, முழு நேர அரசியல் வாதியாக மாற இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அதன் முதல் படியாக வருகிற அக்டோபர் மாதம் 27ம் தேதி தன்னுடைய தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரத்தில் நடத்த இருக்கிறார். இந்த நிலையில் அவர் சினிமாவில் நுழைவதற்காக நடத்திய போராட்டம் குறித்து பார்க்கலாம்.

அப்பாவிடம் சொல்லியும் கேட்கவில்லை

இது குறித்து பல வருடங்களுக்கு முன்பாக விஜய் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் விஜய் பேசும் போது, “ படிப்பில் நான் கொஞ்சம் வீக்கானவன். ஆனால், ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது. அதற்காகத்தான் நான் சினிமாவில் வரவேண்டும் என்று முடிவு செய்தேன். இதை, என்னுடைய அப்பாவிடம் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் கடைசி வரை ஒத்துக் கொள்ளவே இல்லை.

விஜய்

இயல்பாகவே நான் அமைதியாக இருப்பதை பார்த்த அவர், இந்தத் துறை எனக்கு நிச்சயமாக செட்டாகாது என்று நினைத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை பயமுறுத்துவதற்காக, நான் வீட்டை விட்டு செல்கிறேன் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பி விட்டேன்.

அப்படி பயமுறுத்தினாலாவது அவர் என்னை சினிமாவில் நடிக்க அனுமதிப்பார்கள் என்று நினைத்தேன். நான் வேறு எங்கும் செல்லவில்லை. சென்னை உதயம் தியேட்டரில் சென்று படம் பார்த்தேன். படம் பார்த்து முடித்து விட்டு வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அதற்குள் என்னுடைய அப்பா நான் உதயம் தியேட்டரில் தான் இருக்கிறேன் என்பதை கண்டுபிடித்து விட்டார். இதையடுத்து அங்கே வந்த அவர் என்னை அங்கிருந்து தரதரவென இழுத்து வந்தார்.” என்று பேசினார்.

எப்படி ஏற்றுக்கொண்டார்

தன்னுடைய சினிமா ஆசையை அப்பா ஏற்றுக்கொள்ள விஜய் செய்த காரியத்தை இங்கே பார்க்கலாம்.

விஜய் தொடர்ந்து, தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சந்திரசேகர் எப்படி உன்னை நம்ப முடியும். எங்களுக்கு ஏதாவது நடித்துக் காண்பி என்று கேட்டிருக்கிறார். இதையடுத்து அவர்களிடம் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்த விஜய்,  ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினி சவால் விடும் சீனை அப்படியே நடித்துக் காண்பித்திருக்கிறார். 

அவர் நடித்துக் காண்பித்தவுடன் SAC -க்கு விஜய் மீது நம்பிக்கை வந்து விட்டது அதன் பின்னர் தான் அவர்  ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் விஜயை அறிமுகம் செய்தார். அதன் பின்னரும் சினிமா துறையில் விஜய்க்கு மேடு பள்ளங்கள் நிறைய இருந்தன. இறுதியாக அவருக்கு ‘பூவே உனக்காக’ திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து, அவரது கேரியரின் வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி