தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dheena Re Release:'தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது' - அஜித் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் - ரீ ரிலிஸ் ஆகும் தீனா!

Dheena Re Release:'தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது' - அஜித் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் - ரீ ரிலிஸ் ஆகும் தீனா!

Marimuthu M HT Tamil

Apr 29, 2024, 07:44 PM IST

Dheena Re Release: நடிகர் அஜித் குமாரின், பிறந்தநாளன்று ‘தீனா’ திரைப்படம் மீண்டும் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Dheena Re Release: நடிகர் அஜித் குமாரின், பிறந்தநாளன்று ‘தீனா’ திரைப்படம் மீண்டும் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dheena Re Release: நடிகர் அஜித் குமாரின், பிறந்தநாளன்று ‘தீனா’ திரைப்படம் மீண்டும் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dheena Re Release: நடிகர் அஜித் குமார் நடித்த தீனா திரைப்படம், அவரது பிறந்தநாளை ஒட்டி, வரக்கூடிய மே 1ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகுகிறது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Ilaiyaraaja: ரஜினி நடிக்கும் ‘கூலி’படத்தில் தனது இசை உரிமைக்காகப் போராடும் இளையராஜா - பதிப்புரிமைச் சட்டம் சொல்வது என்ன?

Dhanush Divorce Bad Luck: தனுஷை சுற்றும் விவாகரத்து துரதிர்ஷ்டம்.. உடன் பணியாற்றியவர்களை காலி செய்த கொடூரம்

Mysskin Vs Parthiban: உடைந்த பனிப்போர்.. 'ஐயா நான் அப்படி சொல்லல’.. இயக்குநர் பார்த்திபனிடம் பம்மிய மிஷ்கின்!

GV Prakash Saindhavi: தமிழர் மாண்பு எங்க போச்சு.. அத்துமீறி நுழைறீங்க... செருப்படி பதில் கொடுத்த ஜிவி!

மக்களவைத் தேர்தல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருவதால், வாக்கு எண்ணிக்கை முடியும் ஜூன் 4ஆம் தேதி வரை, புதுப்படங்களை குறைவாகவே வெளியிட பலத் தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர்.

இந்த இடைவெளியைப் பயன்படுத்தி புகுந்த மலையாளத் திரைப்படமான மஞ்ஞுமல் பாய்ஸூம் பிரேமலுவும் டப் கூட செய்யாமல், தமிழ்நாட்டில் நேரடியாக ரிலீஸாகி, பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்தது.

மேலும் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட, சில ஹிட் படங்களை எடுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பழைய படங்களை தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம், தற்போது ரீ-ரிலீஸ் ஆகி பத்து கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்‌ஷனைப் பெற்றுள்ளது.

அப்போது பலரும் அஜித்தின் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் இணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். அந்த வகையில் அஜித் நடித்து வெளியான தீனா திரைப்படம் வரும் மே1ஆம் தேதி மீண்டும் ரிலீஸாகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து, 2001ஆம் ஆண்டு, ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தீனா. இப்படத்தில் அஜித் குமாருடன் சேர்த்து, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் நடித்து இருந்தனர். இது ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படம் ஆகும்.

 இப்படத்துக்குண்டான பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா செய்திருந்தார். பாடல்களும் செம ஹிட்டானது. இப்படத்துக்குண்டான ஆக்‌ஷன்மோட் ஒளிப்பதிவினை அரவிந்த் கமலநாதன் மேற்கொண்டிருந்தார். இப்படத்தில் தான் முதன்முதலாக, ‘தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது’ என்னும் வசனத்தை ஸ்டன்ட் மேன் மகாநதி ஷங்கர் பேசியிருப்பார். அன்று முதல் பல ஆண்டுகளாக, ‘’தல'' என ரசிகர்களால் செல்லப்பெயருடன் அழைக்கப்பட்டார், அஜித். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின், அந்தப் பெயரை சொல்லி அழைக்கக் கூடாது என்று அன்புக்கட்டளையிட்டார், அஜித். மேலும் தன்னை அஜித் என்றும்; ஏ.கே. என்றும் அழைத்தால் போதும் என்றார்.

அதன்பின் அஜித் ரசிகர்கள், அதனைப் பின்பற்றத் தொடங்கினர்.

இந்நிலையில் ‘தீனா’திரைப்படம் வெளியாகி 23 வருடங்களுக்குப் பின், அஜித் குமாரின் பிறந்தநாளான மே1ஆம் தேதியை ஒட்டி, தீனா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆவதாக தயாரிப்பு நிறுவனமான விஜயம் சினி கம்பைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக இப்படம் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் வெளிவருகிறது. 

முன்னதாக அஜித் குமார் நடித்து வெளியான பில்லா திரைப்படமும், மங்காத்தா திரைப்படமும் அதே மே.1ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

’சென்னை 28’ படத்தை பார்த்து இம்ரஸ் ஆன அஜித் குமார், ஜி படத்தில் தன்னோடு நடித்த வெங்கட் பிரபுவுக்கு கொடுத்த வாய்ப்புதான் ‘மங்கத்தா’, இப்படம் அஜித்தின் 50ஆவது படமாக ரிலீஸாகி மாஸ் மற்றும் கிளாஸ் ஆடியன்ஸை வெகுவாகக் கவர்ந்தது. 

அதேபோல், 2007ஆம் ஆண்டு, இயக்குநர் விஷ்ணு வர்தனின் இயக்கத்தில் அஜித்தை மிக ஸ்டைலிஷாக காட்டி உருவான படம் தான், பில்லா. இப்படமும் அஜித்துக்கு மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக இருந்தது. இப்படத்துக்குண்டான திரையரங்க ரிலீஸை, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீ லாவண்யா ஃபிலிம்ஸ் மேற்கொள்கிறது.

 

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி