Premalu 2: நஸ்லென், மமிதா மீண்டும் இணைந்து உருவாகும் பிரேமலு 2 - வெளியான சூப்பர் அறிவிப்பு
Premalu 2: மலையாள பிளாக்பஸ்டர் படமான பிரேமலுவின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கிரிஷ் ஏ.டி மீண்டும்,அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.
Premalu 2: மலையாளத்தில் கிரிஷ் ஏ.டி. இயக்கி நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ள பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நேரடியாக வெளியானாலும், தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களிலும் பாராட்டுக்களைப் பெற்ற படம், ‘பிரேமலு’.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தவர்களே, இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான தெலுங்கு பதிப்பை, இப்படத்தின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்த எஸ்.எஸ். கார்த்திகேயாவே மீண்டும் வழங்குகிறார்.
பிரேமலு 2 அறிவிப்பு
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த முறை ஹைதராபாத்தில் இப்படத்தின் கதை நடக்காது என்பதைக் குறிக்கும் வகையில் புதிய சுவரொட்டிகள் உள்ளன.
மேலும் பிரேமலு 2 குறித்து அவர்கள் எழுதியதாவது, "மலையாள சினிமாவில் மிகப்பெரிய ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தில் ஒன்றான பிரேமலு, வருகின்ற 2025-ல் பிரேமலு 2-ஆக மீண்டும் வரும்" எனத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவரொட்டியில் ஒரு அரண்மனைக்கு எதிராக நட்சத்திரங்கள் நிறைந்த வானம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக ஃபஹத் பாசில் மீண்டும் இதில் இருக்கிறார்.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா எக்ஸ் தளத்தில் தெலுங்கு பதிப்பின் விநியோகஸ்தராக மீண்டும் வருவதாக அறிவித்தார். அதில், "#Premalu என் வாழ்க்கையில் ஒரு அழகான அத்தியாயம். அதை மறக்க முடியாததாக மாற்றிய எனது தெலுங்கு பார்வையாளர்களுக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அனைத்து ஆதரவிற்கும் அன்பிற்கும் உதவிய பாவனா ஸ்டுடியோஸுக்கு பெரிய நன்றி. தெலுங்கில் பிரேமலு-2-வை வழங்குவதில் உற்சாகமாகவும் பணிவுடன் நடந்துகொள்கிறேன். இன்னும் அன்புடன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
பிரேமலு படம் எத்தகையது?
பிரேமலு திரைப்படம் சச்சின் என்னும் இளைஞனின் கதையைச் சொல்கிறது. இதில் நஸ்லென், மமிதா ஆகியோர் நடித்து இருந்தனர். குறிப்பாக, காதல், நட்பு மற்றும் தொழில் உட்பட அனைத்தையும் வெளிப்படுத்துகிறது. இரண்டு மலையாளிகள் தங்கள் தொழில் நிமித்தமாக ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்து, சந்தித்து இறுதியில் காதலிப்பதை படம் காட்டுகிறது. அமல் டேவிஸ் என்கிற அமுல் பேபியாக சங்கீத் பிரதாப் நடித்துள்ளார். ஆதியாக ஷியாம் மோகன் மற்றும் தாமஸாக மேத்யூ தாமஸ் ஆகியோரும் முன்னணி நடிகர்களைத் தவிர, தங்கள் நடிப்புக்காக பாராட்டுக்களைப் பெற்றனர்.
சச்சின் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்வதாகவும், ரீனு தனது தொழில் வாழ்க்கைக்காக ஹைதராபாத்தில் தங்குவதாகவும் படம் முடிவடைகிறது. இருவரும் சேர்ந்து இந்த நீண்ட தூர ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடிவு செய்கிறார்கள். பிரேமலு 2 திரைப்படத்தில், இப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. கதையை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வார் என்பதைப் பார்க்க ஆவல் உண்டாகியுள்ளது. பிரேமலு 2 படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 2025-ம் ஆண்டு வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சுமார் மூன்று கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம், இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.136 கோடி ரூபாயை வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் சாதனைப் புரிந்துள்ளது.
டாபிக்ஸ்