KPY Dheena Marriage: ‘கலக்கப்போவது யாரு’ தீனாவுக்கு டும் டும் டும்; வரவேற்பு விழா எப்போது? -மணமகள் யாரு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kpy Dheena Marriage: ‘கலக்கப்போவது யாரு’ தீனாவுக்கு டும் டும் டும்; வரவேற்பு விழா எப்போது? -மணமகள் யாரு தெரியுமா?

KPY Dheena Marriage: ‘கலக்கப்போவது யாரு’ தீனாவுக்கு டும் டும் டும்; வரவேற்பு விழா எப்போது? -மணமகள் யாரு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 01, 2023 03:02 PM IST

மணப்பெண்ணின் சொந்த ஊரும் பட்டுக்கோட்டைதான். இந்தத்திருமணத்தில் இருவீட்டார் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்

தீனா திருமணம்
தீனா திருமணம்

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர் அதன் பின்னர் விஜய் டிவியில் பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் போன் காலில் வந்து அவர்களை சகட்டுமேனிக்கு கலாய்த்தார். அதில் அவர் கொடுத்த கவுண்டர்கள் எகிடுதகிடு ஹிட்டடிக்க ஆங்கரிங், சினிமா என பல வாய்ப்புகள் கதவை தட்டியன. அந்த வகையில் பவர் பாண்டி, கைதி, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போதும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க திறமையையும் உழைப்பையும் முதலீடாக வைத்து முன்னேறிய தீனா அண்மையில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டினார்.

அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி இன்றைய தினம் அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டையில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. மணமகள் பெயர் பிரகதி. கிராஃபிக் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். மணப்பெண்ணின் சொந்த ஊரும் பட்டுக்கோட்டைதான். இந்தத்திருமணத்தில் இருவீட்டார் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். வருகிற 10ம் தேதி சென்னையில் வரவேற்பு விழா நடைபெற விருக்கிறது. அதில் சினிமா மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.