Deepak On sivakarthikeyan: டி.இமான் - சிவகார்த்திகேயன் சர்ச்சை - ‘உண்மை தெரியலைன்னா மூடிக்கிட்டு இருக்கணும்’ - தீபக்!
Oct 24, 2023, 07:56 AM IST
சிவகார்த்திகேயன் - டி. இமான் சர்ச்சைக்குறித்து நடிகர் தீபக் பேசி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டதாக பேட்டி ஒன்றில் டி.இமான் ஓப்பனாக பேசினார். இதனையடுத்து டி. இமான் மற்றும் அவரது முதல் மனைவி விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இது குறித்து சிவகார்த்திகேயனின் நண்பர் தீபக் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ சிவா நீ ஆசைப்பட்டது எல்லாமே உனக்கு நடக்கிறது. நீ பயங்கர ஃபோக்கஸ் என்பது எனக்குத் தெரியும். நான் நீ இந்த உயரத்தைத்தான் அடைய வேண்டும் நான் சொல்லமாட்டேன். அந்த உயரத்தை தாண்டி நீ செல்ல வேண்டும்.
வளர்ந்தாலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காதவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் குறித்து சமீபத்தில் சில விஷயங்கள் போய்க்கொண்டிருக்கிறது. தயவு செய்து ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சோசியல் மீடியாவில் நாம் ஒரு சின்ன விஷயத்தை கூட வியூஸூக்காக பெரிய விஷயம் ஆக்கி விடுகிறார்கள். அந்த வீடியோவில் உள்ளே சென்று பார்த்தால் அது குப்பையான விஷயமாக இருக்கும். அப்படியில்லையென்றால் சம்பந்தமே இல்லாத ஒரு விஷயமாக இருக்கும். இதைப்பார்த்து இன்னும் 10 பேர் அதே போன்று செய்கிறார்கள்.
அதைப்பார்க்கும் இன்னொரு நபர் அந்த வீடியோவை பார்க்க வில்லையென்றாலும், அந்த வீடியோவின் வெளிப்புறத்தை பார்த்தே, ஆமாம் ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று தன்னுடைய மனதில் ஏற்றிக்கொள்வார். ஒரு விஷயம் உண்மை என்று தெரியாத போது அந்த விஷயத்தை பற்றி பேசக்கூடாது. கமெண்ட் செய்யக்கூடாது. வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.
டாபிக்ஸ்