கனவு நிறைவேறியது! மகிழ்ச்சியில் ஷாலின் ஜோயா போட்ட பதிவு! என்ன தெரியுமா?
Oct 22, 2024, 04:57 PM IST
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகை ஷாலின் ஜோயா அவரது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாகும். மற்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் இதற்கு ரசிகர்கள் அதிகம். கடந்த சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் பல சர்ச்சைகள் எழுந்தன. போட்டியின் நடுவர் வெங்கடேஷ் பட் சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். மேலும் சில போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். மேலும் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்தார். பிரியாயங்கவின் ஆதிக்கத்தால் நிகழ்ச்சியை விட்டு தொகுப்பாளர் மணிமேகலை வெளியேறினார். இத்தனை தொடர் சர்ச்சைகளை தொடர்ந்தும் நிகழ்ச்சி நன்றாக ஓடியது.
குக் வித் கோமாளி இந்த சீசனில் கலந்து கொண்டவர் தான் நடிகை ஷாலின் ஜோயா, மலையாள திரையுலகத்தைச் சேர்ந்த இவர் சில தமிழ்ப்படங்களிலும் நடித்து உள்ளார். மலையாளத்தில் டிவி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். பின் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகத் தொடங்கினார். மேலும் மலையாளத்தில் ரெபேக்கா ஊதுப் கிழக்கேமாலா, ஆட்டோகிராப், மல்லு சிங், எல்சம்மா என்ன ஆங்குட்டி, விசுதன், கர்மயோதா, தமகா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கலையரசன், காளி வெங்கட் நடித்த ராஜா மந்திரி படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியான கண்ணகி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஷாலின் சில படங்களையும் இயக்கியுள்ளார். இவரது படங்கள் மலையாள மொழியில் வெளியாகி கவனம் பெற்றன.
டிடிஎப் வாசனின் நட்பு
குக் வித் கோமாளி மூலம் அதிகம் பிரபலமடைந்தார். மேலும் இவர் பிரபல பைக் ரேஸரும், அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவருமான டிடிஎப் வாசனின் தோழி ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் பல யுட்யூப் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், தற்போது பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கனவு நிறைவேறியது
ஷாலின் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி பதிவுகளை போட்டு வருவார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் சொந்தமாக வீடு வாங்கியதாக அதன் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்தமகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டதில் இருந்து அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எல்லோருக்கும் இருக்கும் கனவு போல் ஷோயாவிற்கும் சொந்த வீடு கட்டும் ஆசை இருக்க தற்போது அது நிறைவேறியுள்ளதாக கூறி புகைப்படமும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்த அவரது பதிவில், 'அல்ஹம்துலில்லாஹ்
எனது 'சொந்த வீடு'
20களின் முற்பகுதியில் நான் கனவு கண்டதிலிருந்து, எனக்கு தெரிந்ததெல்லாம் நான் வளர்ந்த பிறகு, நான் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளவே விரும்பினேன். நான் சொந்தமாக உணர விரும்பினேன். சிறிய பால்கனியுடன் ஒரு சிறிய பிளாட் எனது வீட்டைப் பற்றிய யோசனையாக இருந்தது. திருமணத்தைப் பற்றியோ அல்லது பிறரைச் சார்ந்திருப்பதையோ அல்லது யாரோ மாயமான முறையில் என்னைக் காப்பாற்றவோ அல்லது என்னைப் பாதுகாப்பாக உணரவோ அல்லது பார்க்கவோ செய்வார்கள் என்ற நம்பிக்கையோ கனவு கண்டதில்லை. இவை அனைத்தையும் நம்பியதில்லை ஆனால் ஆம் எப்பொழுதும் சொந்த வீடு வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் பயணம் செய்ய விரும்பினாலும், பல அன்னிய இடங்களில் வாழ்க்கையை கழித்தாலும், ஒரு வீட்டைக் கொண்ட திட்டம் ஓய்வு பெற்ற வாழ்க்கைத் திட்டத்தைப் போன்றது. இந்த பயணத்தில் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. எனக்காக உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்ததற்கு நன்றி. நான் நம்புகிறேன் எனப் பதிவிட்டு இருந்தார்.
டாபிக்ஸ்