இவர் இவ்ளோ பெரிய ஆளா! ஒளிப்பதிவாளர் தொடங்கி நடிகர் வரை.. இளவரசு பயணம்
Aug 28, 2023, 05:15 AM IST
HBD Ilavarasu: ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் இளவரசு இன்று தனது 59 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகன், கதாநாயகி இருவர் மட்டுமே மிகப்பெரிய நட்சத்திரமாக மக்கள் மத்தியில் தெரிவார்கள். ஆனால் ஒரு படத்திற்கு குறைந்தது 1500 ஊழியர்கள் வேலை செய்வார்கள். திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டும் அனைத்து வித சூழலுக்கும் ஏற்றவாறு நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார்கள்.
அந்த வகையில் மக்கள் மத்தியில் குணச்சித்திரன் நடிகராக மிகப்பெரிய வெற்றி பெற்றவர் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் இளவரசு. கடலோரக் கவிதைகள், சின்னதாஸ் திரைப்படங்களில் இவரும் இருந்திருக்கிறார்.
இயக்குனர் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளியே வந்த பட்டை தீட்டிய வாளில் இவரும் ஒருவர். 1980 களில் மதுரையிலிருந்து தமிழ் சினிமாவை நோக்கி புறப்பட்டவர்களின் விவரம் ஒருவர். ஒரு ஸ்டில் போட்டோகிராபராக தனது வாழ்க்கையை தொடங்கி இயக்குனர் பாரதிராஜாவின் கேமரா மேன் கண்ணனிடம் உதவியாளராக சேர்ந்தார்.
முதல் மரியாதை திரைப்படத்தில் நடிகர் சிவாஜியை காட்டிக் கொடுக்கும் போட்டோகிராபர் கேரக்டரில் நடிப்பவர் வராத காரணத்தினால், இயக்குனர் பாரதிராஜா உதவி ஒளிப்பதிவாளராக இருந்த இளவரசை நடிக்க வைத்தார்.
அதேபோல வேதம் புதிது திரைப்படத்தில் பாலு தேவரை கொலை செய்யும் கேரக்டர் வரவில்லை என்பதற்காக பாரதிராஜா இவரையே நடிக்க சொல்லி இருக்கிறார். அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டினாலும், தனது கேமரா மேன் இலக்கை தவறவிடாமல் அதில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அதன் பின்னர் பாஞ்சாலங்குறிச்சி, நினைத்தேன் வந்தாய், மனம் விரும்புதே உன்னை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட படங்களுக்கு கேரமராமேனாக பணிபுரிந்துள்ளார். மனம் விரும்புதே உன்னை இந்தப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை தமிழ்நாடு அரசிடம் பெற்றார்.
அடுத்தடுத்து வாய்ப்புகள் சிக்காத காரணத்தினால் நடிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தவசி படத்திற்கு பின்னர் முழுமையாக நடிப்பில் களமிறங்கினார். களவாணி, சென்னை 600028, கலகலப்பு திரைப்படத்தில் அமிதாப் மாமா என அனைத்து கேரக்டர்களிலும் சரியாகப் பொருந்தி மக்களிடத்தில் நல்ல இடத்தை பிடித்தார்.
முத்துக்கு முத்தாக திரைப்படத்தில் வயது முதிர்ந்த தந்தையாக எதார்த்தமாக நடித்து, தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார். மக்களிடத்தில் இவர் விரைவில் பிரபலமாக பதிந்ததற்கு காரணம், இவருடைய உடல் மொழியும், மதுரை வழக்கு மொழியும் தான்.
அனைவருக்கும் ஆச்சரியம் கொடுக்கக்கூடிய முக்கிய விஷயம் என்னவென்றால், 1967 லிருந்து 71 வரை மேலூர் வடக்கு தொகுதியில் திமுக எம்எல்ஏ-வாக இருந்த மலைச்சாமியின் மகன்தான் இவர். இதுவரை தான் ஒரு முன்னாள் எம்எல்ஏவின் மகன் என இவர் வெளியே கூறியது கிடையாது.
தனது திறமையால் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்று ஒரு மிகப்பெரிய குணச்சித்திர நடிகராக வளர்ந்து நிற்கிறார். குறிப்பாக மக்கள் மறக்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறார். நடிகர் இளவரசு தனது 59 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆகச் சிறந்த கலைஞர்களுக்கு என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள் என்பதற்கு இளவரசு ஒரு மிகப்பெரிய உதாரணமாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்