தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அம்மா இல்லாமல் வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? மனிதநேயம் இறந்து கொண்டிருக்கிறது.. நடிகை கல்யாணி உருக்கம்!

அம்மா இல்லாமல் வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? மனிதநேயம் இறந்து கொண்டிருக்கிறது.. நடிகை கல்யாணி உருக்கம்!

Divya Sekar HT Tamil

May 21, 2024, 09:11 AM IST

google News
Actress Kalyani : பால்கனியில் இருந்து தவறிவிழுந்த குழந்தையின் அம்மா தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்து இருக்கிறார்கள் என நடிகை கல்யாணி வீடியோ வெளியிட்டுள்ளார்.
Actress Kalyani : பால்கனியில் இருந்து தவறிவிழுந்த குழந்தையின் அம்மா தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்து இருக்கிறார்கள் என நடிகை கல்யாணி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Actress Kalyani : பால்கனியில் இருந்து தவறிவிழுந்த குழந்தையின் அம்மா தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்து இருக்கிறார்கள் என நடிகை கல்யாணி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தவறி விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையின் தாய் சமூகவலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்களால் மன அழுத்தம் காரணமாக காரமடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அருகில் தவறி விழுந்த குழந்தை

கோவை மாவட்டம் காரமடை பெள்ளாதி ரோடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் இவரது இரண்டாவது மகள் ரம்யா. இவர் சென்னையில் தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருமுல்லை வாயிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்

ஜ.டி ஊழியரான இருவரும் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த தம்பதியினரின் ஏழு மாத கை குழந்தை அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அருகில் தவறி விழுந்து தத்தளித்த நிலையில் அருகில் இருந்தவர்கள் போராடி பத்திரமாக மீட்டனர்

இந்த சம்பவம் நடந்தது குறித்து சமூக வளைதளங்கான பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பரவியது. அதில் தாய் ரம்யா குறித்து கமென்ட்ஸ் பக்கத்தில் மிக மோசமான நிலையில் கருத்து தெரிவித்து பலரும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது மிகவும் அமைதியாக வாழ்க்கையில் இருந்த ரம்யாவுக்கு இந்த கருத்துக்கள் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துள்ளார்.

குழந்தையின் தாய் தற்கொலை

இருப்பினும் அதில் இருந்த மீண்டு வராமல் மிகவும் மன அழுத்தம் ஏற்பட்டு ரம்யா மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சென்னையில் இருந்து ரம்யா தனது சொந்த ஊரான காரமடைக்கு தாய் வீட்டிற்கு கடந்த 15நாட்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார்

இங்கு தங்கி இருந்த நிலையில் நேற்று மாலை ரம்யாவின் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சிக்கு வெளியே சென்ற நேரத்தில் மன அழுத்தத்தில் இருந்த ரம்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் வெளியில் சென்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்து போது ரம்யா தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்

இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்கள் என்பது ஆரோக்கிய விஷயத்தை பரிமாற கொள்ளத்தான் ஆனால் சமீபகாலமாக இந்த வளைதள பக்கங்களால் மாறுபட்ட கருத்துக்களால் தனிமனித வாழ்க்கை மிகவும் சீரழிக்கபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

நடிகை கல்யாணி உருக்கம்

இதுகுறித்து நடிகை கல்யாணி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் மனிதநேயம் இறந்து கொண்டிருக்கிறது, பச்சாதாபம் இறந்து கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”பால்கனியில் இருந்து தவறிவிழுந்த குழந்தையின் அம்மா தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்து இருக்கிறார்கள்.

அம்மா இல்லாமல் வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

அப்படி இருக்கும் போது, நீ குழந்தையை சரியா பார்த்துக்கொள்ளவில்லை, நீ எல்லாம் ஒரு அம்மாவா என்று அவர்களை புல்லிங் செய்து அவர்களை இந்த முடிவை எடுக்க வைத்து இருக்கிறீர்கள். இது ஒரு விபத்து, அவர்கள் வேண்டும் என்றே செய்யவில்லை. எந்த தாயும் அப்படி செய்யமாட்டாள் என்பது குழந்தையை பெற்ற எல்லா பெண்களுக்கும் தெரியும்.

ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பவர்களை திரும்ப திரும்ப காயப்படுத்தி பேசி கடைசியல் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார். இப்போ யாருக்கு கஷ்டம் அம்மாவை இழந்து வாழும் அந்த இரண்டு குழந்தைக்குத்தான் கஷ்டம். காலம் முழுக்க அந்த குழந்தைகள் அம்மா இல்லாமல் வாழ வேண்டும். அம்மா இல்லாமல் வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? தயவு செய்து ஒருத்தருக்கு உதவி செய்யவில்லை என்றாலும், அவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று பேசி உருக்கமாக பேசி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி