(3 / 6)எம்.ஜி.ஆருக்கு ஆர்.எம்.வீரப்பன் என்னும் ஆர்.எம்.வீ:எம்.ஜி.ஆருக்கு மூத்த அரசியல்வாதிகள் சிலர் எப்போதுமே உடன் இருந்தனர். அவரும் அதை விரும்பினார். பரங்கிமலையில் வெற்றிபெற்றது முதல் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது வரை, இது தொடர்ந்தது. குறிப்பாக, ஆர்.எம்.வீரப்பனின் நட்பு, எம்.ஜி.ஆருக்கு கை கொடுத்தது. எம்.ஜி.ஆருக்கு நாடகக் கம்பெனியில் இருந்தபோது இருந்து ஆலோசனைகள் கூறுவது, படத்தின் கதையைத் தேர்வு செய்து கொடுப்பது எனப் பல்வேறு பணிகளை ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்குக் கூறினார்.காவல்காரன் படத்தின் கதையைப் பரிந்துரைக்கிறார், ஆர்.எம்.வீ.. ஆனால், இப்படத்துக்கு ஜெயலலிதா தான் சரியாக வருவார் என ஆர்.எம்.வீ நினைக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆர் சரோஜா தேவியைப் பரிந்துரைக்கிறார்.பட பூஜையும் நடத்தப்பட்டது. அதில், ஆர்.எம்.வீ பரிந்துரைத்த ஜெயலலிதாவுக்குப் பதிலாக சரோஜா தேவி, படபூஜையில் கலந்துகொண்டார். அதில் கோபமாகி விடுகிறார், ஆர்.எம்.வீ. அதன்பின், எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார், ஆர்.எம்.வீ. இதனால், கோபம் ஆகிவிடுகிறார், எம்.ஜி.ஆர்.