தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pathaan Censor: பதான் சென்சார் ரிப்போர்ட் லீக்…பேஷரம் ரங் பாடலில் என்ன மாற்றம்?

Pathaan Censor: பதான் சென்சார் ரிப்போர்ட் லீக்…பேஷரம் ரங் பாடலில் என்ன மாற்றம்?

Aarthi V HT Tamil

Jan 05, 2023, 01:22 PM IST

google News
பதான் படத்தில் இருந்து பேஷரம் ரங் பாடலில் இருந்து மூன்று காட்சிள் நீக்கம் செய்ய சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.
பதான் படத்தில் இருந்து பேஷரம் ரங் பாடலில் இருந்து மூன்று காட்சிள் நீக்கம் செய்ய சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.

பதான் படத்தில் இருந்து பேஷரம் ரங் பாடலில் இருந்து மூன்று காட்சிள் நீக்கம் செய்ய சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், பதான். ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள இப்படம், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

பதான் படத்தின் முதல் பாடலான 'பேஷரம் ரங்' பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறது. அதில் தீபிகா படுகோன் காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்துள்ளது  கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.

வலதுசாரி அமைப்புகள், அரசியல்வாதிகள், இந்துத்துவ கும்பல் என பலரும் பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

 இதனிடையே மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி அப்பாடலில் சில மாற்றங்களை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.  ரிலீசுக்கு முன்பு திருத்தப்பட்ட பதிப்பு சமப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

ஷாருக்கானின் காட்களில் பல மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டன. சென்சார் போர்டு, படத்தில் வசனங்கள் மற்றும் பல காட்சிகள் உட்பட 1 0க்கும் மேற்பட்ட வெட்டுக்களைக் கொடுத்து உள்ளது.

ஒரு அறிக்கையின்படி, 'Raw' என்பதற்குப் பதிலாக 'ஹமாரே', 'Langde Lulle' என்பதற்குப் பதிலாக 'Toote Foot', 'PM' என்பதற்குப் பதிலாக 'President or Minister' மற்றும் 'PMO' என்ற வார்த்தை 13 இடங்களில் இருந்து நீக்கப்பட்டது. 'அசோக் சக்ரா' என்பதற்குப் பதிலாக 'வீர் புரஸ்கார்', 'எக்ஸ்-கேஜிபி'க்கு 'எக்ஸ்-எஸ்பியு' மற்றும் 'மிஸஸ் பாரத்மாதா' 'ஹமாரி பாரத்மாதா' என்று மாற்றப்பட்டது. ஸ்காட்ச் என்ற வார்த்தைக்கு பதிலாக 'டிரிங்க்' என்றும், 'பிளாக் ப்ரிசன், ரஷ்யா' என்ற வாசகம் 'பிளாக் ப்ரிசன்' என்றும் மாற்றப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

'பேஷரம் ரங்' பாடலில் இருவரும் நெருக்கமான காட்சிகள்,தீபிகாவின் சைட் போஸ் காட்சிகளும், 'பஹுத் டாங் கியா' பாடல் வரிகளில் சில காட்சிகளை அதற்கு ஏற்றார் போல் பொருத்தமான காட்சிகள் கொடுத்து மாற்றம் செய்யப்படவுள்ளன. இருப்பினும் தீபிகா படுகோனேவின் சர்ச்சைக்குரிய ஆடை குறித்து சென்சார் போர்டு என்ன சொன்னது என்பது குறித்து இன்னும் உறுதி தெரியவில்லை.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி