Lok Sabha Election 2024: விஜய் முதல் விஜய் சேதுபதி வரை.. மக்களவை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!
Apr 19, 2024, 12:33 PM IST
மக்களவை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி நாடாளுமன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி (இன்று) நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.17 கோடி 3 ஆம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.
வாக்காளர் அடையாள அட்டை உங்களிடம் இல்லையென்றால் பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டை, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டைகள் ஆகிய 13 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்து உள்ளார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடியில் காரில் வந்து வாக்களித்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியுடன் வந்து வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் தனுஷ்
சென்னை டி. டி. கே சாலையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ் தனது வாக்கினை செலுத்தி உள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன்
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் இயக்குநர் வெற்றிமாறன் தனது வாக்கினை செலுத்தி உள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிகர் விஜய் சேதுபதி தனது வாக்கினை பதிவு செய்தார்.
ராதிகா சரத்குமார்
நடிகையும், பாஜக வேட்பாளருமான ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தந்தையுடன் வாக்களித்த கெளதம் கார்த்திக்
நடிகர் கௌதம் கார்த்திக் தனது தந்தை கார்த்திக் உடன் வந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
15 நிமிடம் முன்பே வாக்குச்சாவடிக்கு வந்த அஜித்
நடிகர் அஜித், ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடம் முன்பே வாக்குச்சாவடிக்கு வந்து உள்ளார். ஏராளமான ரசிகர்கள் அவரின் வருகையை அறிந்து கூட்ட நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தினால் முன்பே அவர் வருகை தந்து இருக்கிறார். சரியான 7 மணிக்கு முதல் நபராக அவர் தனது வாக்கை செலுத்திவிட்டு சென்று இருக்கிறார்.
தான் வாக்கு செலுத்திய பிறகு பத்திரிக்கையாளரிடம் காண்பித்துவிட்டு புகைப்படம் எடுத்து சென்றார் அஜித். வெள்ளை சட்டை, விடாமுயற்சி பட லுக்கில் அசத்தலாக வந்து தனது வாக்கை செலுத்திவிட்டு சென்ற அஜித்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.