Vishal Censor Board Bribe Issue: சென்சார் சான்றிதழ் வழங்க லஞ்ச வழங்கிய விவகாரம் - சிபிஐ 3 பேர் மீது வழக்குப்பதிவு
Oct 05, 2023, 04:33 PM IST
சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக ரூ. 6.5 லட்சம் லஞ்சம் அளித்ததாக நடிகர் விஷால் அளித்த மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
விஷால் நடிப்பில் சமீபவத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மார்க் ஆண்டனி. இந்தப் படம் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மார்க் ஆண்டனி இந்தி பதிப்பு சென்சார் பெறுவதற்காக ரூ. 6.5 லட்சம் பணத்தை மும்பையில் உள்ள சென்சார் அதிகாரிகள் பெற்றதாக நடிகர் விஷால் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் சில சென்சார் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்க் ஆண்டனி இந்தி பதிப்பு செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " செப்டம்பர் 2023இல் வெளியான இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட படத்துக்கு மும்பையில் உள்ள CBFCயில் இருந்து தேவையான சென்சார் சான்றிதழை பெற, ரூ.7 லட்சம் லஞ்சம் பெறுவதற்காக தனிப்பட்ட நபர் ஒருவர் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக மும்பை CBFC அதிகாரிகள் சார்பில் ரூ. 7 லட்சம் கேட்டு, பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரூ. 6.54 லட்சம் பெற்றதாக தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது வங்கிக் கணக்கில் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து ரூ. 20 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் மும்பையில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டபோது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, சென்சார் பெறுவதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக விடியோ ஒன்றின் மூலம் பிரதமர் மோடி, மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரின கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதன் பின்னர் உடனடியாக ஆக்ஷனில் இறங்கியிருக்கும் சிபிஐ வழக்குப்பதிவும் செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9