தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தங்கலான் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகுமா? தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தங்கலான் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகுமா? தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Suguna Devi P HT Tamil

Oct 07, 2024, 09:32 PM IST

google News
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக தடை விதிக்க கோரி ஒரு மனு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக தடை விதிக்க கோரி ஒரு மனு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக தடை விதிக்க கோரி ஒரு மனு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் பல வலிமை மிக்க கதைகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான படங்கள் பேசும் கருத்தும் சமூகத்திற்கு தேவைப்படுகின்றன. அந்த வரிசையில் சமூகநீதி கருத்துக்களை ஆழமாக படத்தின் வாயிலாக கொண்டு வருபவர் தன் இயக்குநர் பா. ரஞ்சித். இவரது படங்கள் அனைத்தும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின்  வலியை பேசும் படமாக வரும். மேலும் மெட்ராஸ், காலா, கபாலி என பல ஆக்சன் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக தடை விதிக்க கோரி ஒரு மனு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காரத்தி என முன்னனி நடிகர்களுடன் கைகோர்த்து வந்த பா. ரஞ்சித், தங்கலான் படம் வாயிலாக சீயான் விக்ரம் உடன் இணைந்தார். வரலாற்று நிகழ்வு படமாக உருவான தங்கலான் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகியது. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. மேலும் 100 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியது. இப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பண்ணையாரால் நிலத்தை பறிகொடுத்து, கோலார் தங்க சுரங்ககதிற்கு வேலைக்கு செல்கின்றனர். அங்கு பொறுப்பாக உள்ள பிரிட்டிஷ் காரர் அவர்களை அடிமையாக்கி வேலை வாங்குகிறான். இதற்கிடையில் அடிமைப்பட்ட மக்களை விடுவிக்க போராடும் தங்கலானின் துணிச்சல் மிகு கதையே இப்படத்தின் கதையாகும். 

எதிர்பார்க்கப்பட்ட ஓடிடி ரிலீஸ் 

ஆகஸ்ட் மாதம் வெளியாகிய தங்கலான் அதிக மாதங்கள் திரையரங்குகளில் ஓடியது. இதனை அடுத்து இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, முத்துக்குமார் உட்பட பலர் நடித்து இருந்தனர். ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அனைத்து தரப்பினராலும் படம் பாராட்டப்பெற்றது. 

ஓடிடி ரிலீஸிற்கு தடை  

இந்நிலையில் தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக கூடாது எனவும், அதனை தடை செய்யக் கோரி திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தங்கலான் திரைப்படத்தில் புத்த மதம் குறித்து புனிதமாகவும், வைணவம் பற்றி நகைச்சுவையாக சித்தரிக்கும் விதமாகவும் படத்தில் காட்சிகள் உள்ளன. இதனால் 'தங்கலான்' ஓடிடியில் வெளியானால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி 

இதனால் 'தங்கலான்' படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது மேலும் தள்ளிப்போகும் என தெரிகிறது. இந்த விஷயத்தால் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கலான் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போவது குறித்து கவலைப் பதிவுகள் பதிவிட்டு வருகின்றன.  

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை