தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் லப்பர் பந்து! பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா

பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் லப்பர் பந்து! பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா

Suguna Devi P HT Tamil

Oct 06, 2024, 01:46 PM IST

google News
அறிமுகப் படத்திலேயே பாராட்டை அள்ளி குவித்து வரும் லப்பர் பந்து தமிழ்நாட்டு அளவிலும் கோடிக் கணக்கில் வசூலை அள்ளி குவித்து வருகிறது.
அறிமுகப் படத்திலேயே பாராட்டை அள்ளி குவித்து வரும் லப்பர் பந்து தமிழ்நாட்டு அளவிலும் கோடிக் கணக்கில் வசூலை அள்ளி குவித்து வருகிறது.

அறிமுகப் படத்திலேயே பாராட்டை அள்ளி குவித்து வரும் லப்பர் பந்து தமிழ்நாட்டு அளவிலும் கோடிக் கணக்கில் வசூலை அள்ளி குவித்து வருகிறது.

அறிமுகப் படத்திலேயே பாராட்டை அள்ளி குவித்து வரும் லப்பர் பந்து தமிழ்நாட்டு அளவிலும் கோடிக் கணக்கில் வசூலை அள்ளி குவித்து வருகிறது. இப்படத்தை தமிழரசன் பச்சை முத்து என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இவரது நேர்த்தியான இந்த படைப்பின் காரணமாக ரசிகர்கள் இப்படத்தினை கொண்டாடி வருகின்றனர். ஹரீஷ் கல்யாண், தினேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 20 அன்று வெளியாகியது. இப்படத்திற்கு தொடக்கத்தில் சில திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இயக்குநருக்கு தங்கச்செயின் 

தமிழ் திரைபடங்கள் வெற்றி அடையும் போது அப்படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர் என யாராவது இயக்குநருக்கு தங்க செயினை பரிசாக வழங்குவது வழக்கமாக உள்ளது. இந்த வரிசையில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவும் அடங்குவர். தற்போது லப்பர் பந்து வெற்றியடைந்ததை தொடர்ந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்துவிற்கு ஹீரோ ஹரீஷ் கல்யாண் தங்கச்செயின் பரிசு அளித்துள்ளார். 

பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் 

திரையரங்குகளில் 15 நாட்களைக் கடந்து வெற்றி கரமாக லப்பர் பந்து ஓடி வருகிறது. இந்த நிலையில், 16 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது. இப்படம் பெரிய ஸ்டார்கள் யாரும் இல்லாமல், கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மக்களிடத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நல்ல வசூலை பெற்றுள்ளது. 

விஜயகாந்திற்கு சமர்ப்பணம் 

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் முந்தைய பாடல்களை உபயோகித்து ரசிகர்களை தன் வசம் கொண்டு வரும் யுக்தி கையாளப்படுகிறது. அந்த வரிசையில் லப்பர் பந்தில் விஜயகாந்த் பட பாடலான ‘பொட்டு வச்ச தங்க குடம்'என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து கேப்டன் விஜயகாந்திற்கு இப்படம் சமர்ப்பணம் என்று கூறப்பட்டது. 

லப்பர் பந்து அடித்த சிக்சர் 

நடிகர் ஹரிஸ் கல்யாண் இதற்கு முன் எம். எஸ். பாஸ்கருடன் இணைந்து நடித்த பார்க்கிங் திரைப்படமும் இருவருக்கு இடையில் இருக்கும் ஈகோவை அடிப்படையாக வைத்து இருந்தது. அது போலவே கெத்துவிற்கும், அன்புவிற்கும் இடையே உள்ள ஈகோ சண்டை லப்பர் பந்தில் இடம் பெற்றிருந்தது. இருப்பினும் அந்த ஈகோவை தாண்டி படம் பேச வந்த சமூக நீதியையும் தெளிவாக எடுத்து உரைத்து இருந்தது. மேலும் துணை நடிகர்களாக வந்த ஜென்சன் திவாகர் மற்றும் பால சரவணன் அவர்கள் இணைந்து நடித்த அனைத்து காட்சிகளும் விசில் பறக்கும் படி இருந்தன. இந்த படத்தில் காட்டப்பட்டிருந்த அனைத்து பெண் கதாபாத்திரங்களும் சிறப்பான வகையில் வடிவமைக்கபட்டிருந்தன.  இந்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஸன் சிறந்த கதை மற்றும் திரைக்கதை மட்டும் இருந்தாலே மக்களிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நிரூபிக்க பட்டுள்ளது. 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி