தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bonda Mani: நடிகர்கள் உதவ வேண்டும் - போண்டா மணி கோரிக்கை

Bonda Mani: நடிகர்கள் உதவ வேண்டும் - போண்டா மணி கோரிக்கை

Aarthi V HT Tamil

Oct 01, 2022, 10:11 AM IST

google News
நடிகர் போண்டா மணி தன் சிறூநீரக அறுவை சிகிச்சைக்கு முன்னணி நடிகர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.
நடிகர் போண்டா மணி தன் சிறூநீரக அறுவை சிகிச்சைக்கு முன்னணி நடிகர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.

நடிகர் போண்டா மணி தன் சிறூநீரக அறுவை சிகிச்சைக்கு முன்னணி நடிகர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.

காமெடி நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் தற்போது சிகிச்சை முடிந்து போரூரில் உள்ள தனது வீட்டில் உள்ளார். அவருக்கு அதிமுக சார்பில் 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் போண்டாமணி, "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மாகப்பிரமணியன் நேரில் வந்து நலம் விசாரித்தார். 

முதல்வர் சார்பில் முதல்வரின் உதவியாளர் அவ்வப்போது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள். நான் உழைத்த கட்சி சார்பில் யாரும் வந்து நலம் விசாரிக்காதது மனவருத்தம் அளித்தது.

இன்று இரு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் எனது இல்லம் தேடி வந்து நலம் விசாரித்து நிதி உதவி வழங்கியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 

எனது உடல்நிலை அறிந்து உதவிய நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினருக்கு மிக்க நன்றி. நான் ரஜினி அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்துள்ளேன். எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் என் துறை சார்ந்தவர்கள் எனக்கு உதவி செய்வர்கள் என நம்புவதாக உருக்கமாக கூறினார். நான் உடல்நலம் பெற்று மீண்டு வந்து மக்களை சிரிக்க வைக்க நடிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி