தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சீனியில் செய்த கடல்! ஆண்களை வெல்லும் ஆறடி ஆயுதம்! மயக்கும் கண்ணழிகி மல்லிகா செராவத் பிறந்தநாள் இன்று!

சீனியில் செய்த கடல்! ஆண்களை வெல்லும் ஆறடி ஆயுதம்! மயக்கும் கண்ணழிகி மல்லிகா செராவத் பிறந்தநாள் இன்று!

Suguna Devi P HT Tamil

Oct 24, 2024, 06:27 AM IST

google News
இந்தியில் 2003 ஆம் ஆண்டில் குவாஹிஷ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமடைய தொடங்கினார். இதனையடுத்து 2004 ஆம் ஆண்டு இம்ரான் ஹாஸ்மியுடன் இவர் நடித்த மார்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனையும் அள்ளிக்குவித்தது.
இந்தியில் 2003 ஆம் ஆண்டில் குவாஹிஷ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமடைய தொடங்கினார். இதனையடுத்து 2004 ஆம் ஆண்டு இம்ரான் ஹாஸ்மியுடன் இவர் நடித்த மார்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனையும் அள்ளிக்குவித்தது.

இந்தியில் 2003 ஆம் ஆண்டில் குவாஹிஷ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமடைய தொடங்கினார். இதனையடுத்து 2004 ஆம் ஆண்டு இம்ரான் ஹாஸ்மியுடன் இவர் நடித்த மார்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனையும் அள்ளிக்குவித்தது.

உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சினிமா துறைகளிலும் கவர்ச்சி நடிகைகளுக்கு என  எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அதுவும் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் கவர்ச்சி நடிகைகளை திரையில் மிகவும் குதூகலத்துடன் கண்டு ரசிக்கும் வழக்கம் அதிகமாகவே உள்ளது. ஆனால் அதே கவர்ச்சி நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாக பேசும் மனப்பாங்கு உடையவர்களும் உள்ளனர்.  இந்நிலையில் ஒரு கவர்ச்சி நடிகை ஆக மட்டுமல்லாமல் தைரியமான ஒரு நபராகவும் வலம் வந்தவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷராவத். அவர் தனது 48வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். 

 மல்லிகா செராவத் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு மையா மையா பாடலின் வழியாகத்தான் அறிமுகமானார். பின்னர் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் ஜாஸ்மின் என்கிற கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பாலிவுட் சினிமா உலகில் நடக்கும் கேஸ்ட் கவுச்சிங் பற்றி வெளிப்படையாக பேசிய நடிகையாகவும் மல்லிகா செராவத் உள்ளார். திரைத்துறை மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து வெளிப்படையாக சில நடிகைகள் மட்டுமே பேசுகின்றனர். அவ்வாறு ஒருவார் பேசும் போதும் கூட அவர்களை மேலும் அவமானப்படுத்தும் பாணியிலேயே பலர் பேசி வருகின்றனர். 

இந்தியில் கொடி கட்டிப் பரந்த மல்லிகா 

இந்தியில் 2003 ஆம் ஆண்டில் குவாஹிஷ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமடைய தொடங்கினார். இதனையடுத்து 2004 ஆம் ஆண்டு இம்ரான் ஹாஸ்மியுடன் இவர் நடித்த மார்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனையும் அள்ளிக்குவித்தது. அதனைத் தொடர்ந்து முன்னணி கவர்ச்சி நடிகையாக உருவெடுத்தார். இவர் இந்தி தவிர தமிழ், கன்னடம் போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார். 

இந்தி டிவி ரியாலிட்டி நிகழ்சிகளிலும் பங்கேற்று உள்ளார். குறிப்பாக இந்தியில் 2013 ஆம் ஆண்டு தி பேச்சுரேலேட் இந்தியா எனும் நிகழ்ச்சி மூலம் அவர் டேட்டிங் செய்ய ஒரு நபரையும் தேர்ந்தெடுத்தார். இந்தி சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

வெளிப்படையாக பேசுபவர் 

கவர்ச்சி நடிகையாக இருந்த போதிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக உடனடியாக குரல் கொடுப்பார். செராவத் 2014 இல் 65வது ஐக்கிய நாடுகளின் DPI/NGO மாநாட்டில் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி விவாதித்து, பெண்கள் உரிமை செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் 2018 கேன்ஸ் திரைப்பட விழாவின் போது, ​​ஃப்ரீ ஏ கேர்ள் இந்தியா என்ஜிஓவை ஆதரிப்பதற்காக ஷெராவத் தன்னை ஒரு கூண்டில் பன்னிரெண்டு மணிநேரம் அடைத்து வைத்திருந்தார்.

பாலிவுட்டில் பெரிய ஹீரோக்களின் படங்களில் ஹீரோயின் ஆக நடிக்க பல படங்களில் வாய்ப்பு கிடைத்ததாகவும், இருப்பினும் காஸ்டிங் கவுச் எனும் பாலியல் எதிர்பார்ப்புகளுக்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் அந்த வாய்ப்புக்களை இழந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது குறித்து இவர் பேசிய வீடியோ கல்கத்தா மருத்தவர் கொலையின் போது மீண்டும் வைரலானது. 

அதில் இந்தியாவை பிற்போக்கு நாடு எனக் கூறியுள்ளீர்கள், பின் எதற்காக உங்களது துணையை இந்தியாவில் தேடுகிறீர்கள் என பத்திரிக்கையாளர் கேட்டதற்கு மிகவும் தைரியமான பதிலை அளித்து இருந்தார். இந்திய சமுதாயம் ஒரு பிற்போக்குத் தனமான சமுதாயம் தான். இங்கு தான் 40 சதவீத  பெண்கள் 18 வயதுக்கு கீழ் திருமணம் செய்கின்றனர். ஒவ்வொருநாளும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பாலியல் கொடுமை, ஆணவ படுகொலை நடந்து கொண்டிருக்கின்றன' எனத் தெரிவித்தார்.  

தன்னை நோக்கி வைக்கப்படும் விமர்சனங்களையும் எளிதாக கையாள்வார். இவர் மேல் வைக்கப்படும் கவர்ச்சி பிம்பங்கள் அனைத்தையும் அவரின் நேர்த்தியான நடிப்பால் தகர்த்து எறிந்து இருப்பார். தசாவதாரம் படத்தில் வெளிநாட்டு தீவிரவிவாதியின் ஜோடியாக வரும் ஜாஸ்மின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பார். மேலும் ஒஸ்தி படத்தில் வந்த ஒஸ்தி மாமே பாடலில் இவரது நடனத்திற்கு பல ரசிகர்கள் இன்றும் உள்ளனர். மல்லிகா ஷெராவத் தனது  48 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக அவருக்கு பிறந்த நாள் வாழ்துகள். 

 

 

 

 

 

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி