Blue sattai maran: நீங்க ‘சின்ன தளபதியா’?- முதல்ல ரஜினி.. இப்ப விஜயா? - சிவகார்த்திகேயனை வெளுத்த ப்ளூசட்டை மாறன்!
Sep 06, 2024, 08:26 PM IST
Blue sattai Maran: நீங்கள் முதலில் ரஜினியாக முயன்றீர்கள். அதனால்தான் ரஜினிமுருகன், கேடி பில்லா, வேலைக்காரன், மாவீரன் என டைட்டில் வைத்தீர்கள். - சிவாவை வெளுத்த ப்ளூ சட்டை மாறன்!
Blue sattai Maran: கோட் திரைப்படத்தில் விஜய் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு விட்டுத்தருவது போன்ற காட்சி ஒன்று வருகிறது. அந்தக்காட்சியில், விஜய் நடித்ததும், அதை சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டதும் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் இது குறித்தான தன்னுடைய விமர்சனத்தை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
விஜய் இடத்திற்கு நீங்களா?
இது குறித்து பதிவிட்டு இருக்கும் அவர், “ நான் பாத்துக்கறேன் என்றால்? விஜய் இடத்திற்கு வரப்போகிறேன் என்கிறாரா?பலருக்கும் ரஜினி, விஜய் ஆக ஆசை. ஆனால் இந்த இடத்தை பிடிக்க ரஜினிக்கு சுமார் 50 ஆண்டுகளும், விஜய்க்கு 30 ஆண்டுகளும் ஆகியுள்ளது. காதல், குடும்பம், ஆக்சன், காமெடி என பல்வேறு ஜானர்களில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்தவர் விஜய். அதனால்தான் இத்தனை கோடி ரசிகர்கள்.
நீங்கள் முதலில் ரஜினியாக முயன்றீர்கள். அதனால்தான் ரஜினிமுருகன், கேடி பில்லா, வேலைக்காரன், மாவீரன் என டைட்டில் வைத்தீர்கள். ஜெயிலரில் ரஜினியின் மகன் கேரக்டரில் நடிக்க கடுமையாக முயன்றீர்களாம். உங்கள் நெருங்கிய நண்பர் நெல்சன் சிபாரிசு செய்தும்.. தலைவர் நோ சொன்னதாக தகவல். Not official.
விஜய் பக்கம் தாவியுள்ளீர்கள்.
ஒருவேளை படம் ஹிட்டானால் உங்களால்தான் ஓடியது என சொல்வார்கள் என்பதால் தலைவர் அலர்ட் ஆகி விட்டாராம். தலைவரை பின்பற்றினால் இந்த தலைமுறை ரசிகர்களை கவர இயலாது என்பதால் இப்போது விஜய் பக்கம் தாவியுள்ளீர்கள்.
நீங்கள் இதுவரை நடித்தவை காமடி படங்கள் மட்டுமே. சீரியஸ் முயற்சிகளான வேலைக்காரன், ஹீரோ போன்றவை ஓடவில்லை. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித். இவர்களின் இடங்களை இனி யாரும் பிடிக்க முடியாது. இவர்களுக்கு உள்ள மாபெரும் ரசிகர் பட்டாளமும் இனி கிடைக்காது.
விஜய் அரசியலுக்கு சென்றாலும்.. சினிமாவில் அவரது இடத்தை பிறர் பிடிக்க இயலாது. ஆகவே இருக்கும் இடத்தை தக்க வைத்து முன்னேறுவதே சாமர்த்தியம். குட்டி தல, சின்ன தளபதி எனும் கனவு அர்த்தமற்றது." என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, படத்தில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்பது தகவலாக வந்திருந்தது. அவர் உண்மையில் படத்தில் கேமியோ ரோலியில் தான் நடித்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் செமி பைனல் போட்டியானது நடைபெற்றுக் கொண்டிருக்கும். அந்தப்போட்டியில் சென்னை அணிக்கு ஆதரவாக 17 ம் நம்பர் மஞ்சள் ஜெர்சி அணிந்து வரும் சிவகார்த்திகேயன், படத்திலும் சிவகார்த்திகேயனாகவே வந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனாக சிவகார்த்திகேயன்
அவரை படத்தில் காந்தி கதாபாத்திரம் ( விஜய்) மைதானத்தில் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். அப்போது காந்தி கதாபாத்திரத்தை தன்னுடைய ஃபேன் என்று நினைத்துக் கொள்ளும் சிவகார்த்திகேயன்.. "தளபதி அப்போதே நான் குழந்தைகளை கவர்ந்து விட்டேன் என்று கூறியிருந்தார். இப்போது தான் தெரிகிறது நான் பெரியவர்களையும் கவர்ந்திருக்கிறேன் என்று..." என்று சிவகார்த்திகேயன் கூறிவிட்டு, காந்தி கதாபாத்திரத்தின் அருகில் செல்வார். அப்பொழுது காந்தி கதாபாத்திரம் எதையோ தேட, சிவகார்த்திகேயன் அவர் தன்னிடம் ஆட்டோகிராஃப் தான் கேட்பதற்கு நோட்புக்கை எடுக்கிறார் என்று நினைத்துக் கொண்டு, ஆட்டோகிராஃப்பெல்லாம் வேண்டாம் நாம் செல்ஃபியாகவே எடுத்துக் கொள்வோம் என்று சொல்வார்.
விஜய் இடத்தை கேட்ட சிவகார்த்திகேயன்
அந்த சமயத்தில் காந்தி கதாபாத்திரம் சிவகார்த்திகேயனிடம் உதவி ஒன்றைக் கேட்கும். அப்படி கேட்கும் பொழுது, இறுதியாக மைதானத்தில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை உங்களின் கையில் தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு செல்வார். இதையடுத்து சிவகார்த்திகேயன் மறைமுகமாக விஜய் அரசியலுக்கு செல்வதை குறிப்பிடும் வகையில், நீங்கள் வேறு ஏதோ வேலைக்கு அவசரமாக செல்கிறீர்கள். இனி இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுவார். அதாவது விஜய் இருந்த இடத்தில் இனி சிவகார்த்திகேயன் இருப்பார் என்ற ரீதியில் அந்த காட்சி விளக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்