தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Blue Sattai Maran Leo Review: 'சரக்கு தீர்ந்து போச்சு.. முட்டு பாய்ஸ் படுத்தப் போறாங்க..' லியோவை பங்கம் செய்த ப்ளூ சட்டை

Blue Sattai Maran Leo Review: 'சரக்கு தீர்ந்து போச்சு.. முட்டு பாய்ஸ் படுத்தப் போறாங்க..' லியோவை பங்கம் செய்த ப்ளூ சட்டை

Aarthi V HT Tamil

Oct 20, 2023, 10:17 AM IST

google News
லியோ திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது யூ-டியூப் சேனலான தமிழ் டாக்கீஸ் சேனலில் கொடுத்த விமர்சனம் பற்றி பார்க்கலாம்.
லியோ திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது யூ-டியூப் சேனலான தமிழ் டாக்கீஸ் சேனலில் கொடுத்த விமர்சனம் பற்றி பார்க்கலாம்.

லியோ திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது யூ-டியூப் சேனலான தமிழ் டாக்கீஸ் சேனலில் கொடுத்த விமர்சனம் பற்றி பார்க்கலாம்.

ப்ளூ சட்டை மாறன், “ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தின் ரீமேக்காக லியோ உருவாகி இருப்பதாகப் பட குழுவினரை அறிவித்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் பார்த்திபன் என்ற கேரக்டரை காட்டுகிறார்கள். அவர் ஹிமாச்சல பிரதேசத்தில் காபி ஷாப் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு மனைவி, இரண்டு குழந்தை என அமைதியான வருகிறார்.வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

ஒரு நாள் அவர் காபி ஷாப்பிற்கு ஒரு கும்பல் வந்து வம்பு இழுக்கிறார்கள். அவர் தற்காப்பிற்காக அவர்களின் துப்பாக்கியை எடுத்துப் போட்டுத் தள்ளுகிறார். கோர்ட்டுக்கு இந்த வழக்கு வர தற்காப்பிற்காகச் செய்தார் என பாராட்டி வெளியே விட்டு விடுகிறது.

இந்த செய்தி பத்திரிகையில் வருவதைப் பார்த்து தெலுங்கானாவில் இருக்கும் ஒரு கோஸ்திக்கு பெரிய அதிர்ச்சியாகிறது. இந்த பார்த்திபன் இறந்து போன லியோ மாதிரி இருக்கானே? இவன்தான் லியோவா? என்ற சந்தேகம் வந்து இதை தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்து அந்த கோசி தெலுங்கானாவிலிருந்து இமாச்சலப்பிரதேசத்திற்கு படையாகக் கிளம்பினர்.

நேராக அவர் காபி ஷாப்கே சென்று நீ லியோ தானே? என்று கேட்டார்கள். நீங்க யாரோ ஆள் மாரி தேடறீங்க போல நான் லியோ என சொல்ல, அந்த கோஷ்டி அதை ஒத்துக்கொள்ளவில்லை. நான் லியோ இல்ல பார்த்திபன் தான் என அவர் மறுபடியும் மறுபடியும் சொல்ல சொல்ல பார்த்திபனுக்கு பிரஷர் ஆகி தன் அமைதியான குடும்பத்தை பாதிக்கும் என நினைத்து எடுக்கிறார். லியோ யாரு பார்த்திபன் யாரு? எதற்கு லியோவை தேடி வருகிறார்கள் என்பது படத்தின் கதை.

படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் ஓகே ரகமாக தான் இருந்தது. அங்கே ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்டது. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்துல ஹீரோவுக்கு பெரிதா பின் கதை இருக்காது. ஆனா இங்க லியோக்கு ஒரு ஹிஸ்டரி சொல்றேன் பாருனு சரக்கு தீந்து போனவுடனே, சொந்த சரக்கு இறக்கி விடுறேனு ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் சொந்த சரக்கையும் அழிச்சிட்டு வைலன்ஸ் மட்டும் ஆடியனஸ் பக்கம் திருப்பிட்டாங்க.

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்துல ஹீரோவ ஒரு அப்பாவியா காட்டுவாங்க. அந்த அப்பாவிக்கு ஒரு பிரச்னை வரும் போது திருப்பி அடிக்கிறாறுனு போது நமக்கு பிரமிப்பாக இருக்கும். ஆனா இந்த படத்துல ஹீரோ அறிமுகம் பண்ணும் போதே யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஹைனாவையே அவர் இடது கையாலா டீல் பண்ணுவார் என காமிச்சிட்டு, எங்க ஒரு பிரச்னை என்றாலும் எத்தனை பேரை வேண்டுமானாலும் அடிப்பாரு ஆனால் உடம்புல காயமே இருக்காதென்று படத்துலயே டயலாக் இருக்கு. இப்படிப்பட்டவர் திருப்பி அடிக்கிறாருனு போது பிரமிப்பாகவே இல்ல. அதுலையும் இரண்டது பாதியில எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் தூக்கிப் போட்டு மிதிக்கிறார். ஒரு 100 பேர் கார்ல வராங்க. அவனுங்க எல்லாம் இந்த வீடியோ கேம்’ல வர மாதிரி அடிச்சு போட்டுட்டு யார் கூட டயலாக் பேசணுமோ அவன மட்டும் மிச்சம் வைச்சிக்கிட்டு மீது பேரை போட்டு தள்ளிடுவாரு. இப்படி ரெண்டு சீன் வருது படத்துல.

கூட்டதுல வரவங்க இறந்துட்டானா இல்ல மயக்கமா தெரியல அங்கங்க படுத்து இருக்காங்க. ஊர் திருவிழாவில் இருப்பது போல் இருக்காங்க. ஹீரோ வீட்ல இல்லாத போது அக்யூஸ்ட் நுழைந்து எதாவது செய்து விட போறாங்க’னு வீட்டை சுற்றிப் பொறி வைத்து இருப்பாரு. அதை பொறி எப்படி வேலை செய்து என பார்க்க வந்தவங்க போல, அதுல காலை வைச்சி அய்யோ அம்மானு கத்திட்டு இருக்காங்க.

வழக்கமாக எந்த படம் நல்லா இருக்கணும் என்றாலும் அதில் வில்லன் ஸ்ட்ராங்கா இருக்கணும், ஆனா இங்கு வில்லன் ஒர்க் ஆகவே இல்ல. வில்லன் புத்திசாலியா இல்லனா கூட பரவாயில்லை முட்டாபய, மூடநம்பிக்கை புடிச்சவனா இருக்கான்.

இந்த படம் பார்த்துட்டு LCU பேன்ஸ் முட்டு பாய்ஸ் என்னலாம் பாடுப்படுத்த போறாங்க தெரியல. இந்த படத்தை டிகோடிங் பண்றேன் சொல்லிவிட்டு, படத்தில் பாத்தியா ஜார்ஜ் பாத்திரம் என்ன வேலை பார்த்துச்சு. அந்த பொண்ணு வந்துட்டு போனது பாத்தியா? ரோலக்ஸ் ரெபரன்ஸ் வந்துட்டு போச்சு பாத்தியானு? உயிர எடுக்க போறாங்க. படத்துல விக்ரம் பட கெஸ்ட் அப்பியரன்ஸ் வேற இருக்கு. ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் வந்துச்சுனா, அந்த கதையே திருப்பி போடணும். ஆனால் அந்த கேரக்டரே திரும்பி உட்கார்து டப்பிங் பேசிட்டு இருக்கு. அந்த டயலாக்கில் என்ன பேசுது என்றால், போதைப் பொருளை ஒழிக்க என் கூட சேரு என சொல்லுது.

இதுக்கு முன்னால் என கதை ஓடுது என தெரியாமல், அது எதையோ பேசிட்டு இருக்கு. அவர் குடும்ப பிரச்னைக்காக ஹிமாச்சல பிரதேசம் போயிட்டாரு. அந்த காபி ஷாப் கடையைக் கேட்ட அதை விட காமெடி. அந்த கடையே நஷ்டத்துல போதும் போது போர்டில் பிணத்தை மட்டி வைச்சிட்டு போயிட்டங்க. அந்த கடைக்கு யார் வருவா?

லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில 10 படம் தான் எடுப்பேன் சொல்லி இருக்காரு. இது அவரோட 5 ஆவது படம். இந்த படமே கழுதை தேய்ந்து கட்டெறும்பு என கதை மாதிரி இருக்கு. படத்துல சரியா கழுதை, புலி வைச்சி இருக்காரு. இந்த படம் பார்த்தாலே தெரியுது கைதி மாதிரி ஒரு படம் கொடுக்க மாட்டாரு என நம்பலாம். அடுத்து தலைவர் படம் தான். தலைவரை போட ஷார்ப்பான புள்ள இவர் தான். இதே ஃபார்மில் போய் தலைவரை அட்டாக் பண்ணுங்க “ என்றார்.

நன்றி: தமிழ் டாக்கீஸ்

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை