தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lal Salaam: ’தமிழர்கள் பிச்சைக்காரர்கள்!’ லால் சலாம் ஹீரோயினியால் வெடித்தது சர்ச்சை! விளாசும் ப்ளூ சட்டை!

Lal Salaam: ’தமிழர்கள் பிச்சைக்காரர்கள்!’ லால் சலாம் ஹீரோயினியால் வெடித்தது சர்ச்சை! விளாசும் ப்ளூ சட்டை!

Kathiravan V HT Tamil

Jan 29, 2024, 10:40 AM IST

google News
”எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை”
”எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை”

”எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை”

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'லால் சலாம்'. இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது.  கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் வரும் பிப்.9 ஆம் தேதி ரிலீஸாகிறது.  

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை தன்யா பாலகிருஷ்ணா மீது திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், பெயர்: தான்யா பாலகிருஷ்ணன். பெங்களூரில் வசிப்பவர். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற சில தமிழ்ப்படங்களில் நடித்தார். வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்களுக்கு முன்பு CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அது இதுதான்:

Dear Chennai, you beg for water we give! You beg for electricity, we give! ur people come and occupy our beautiful city and kocha paduthify it, we allow and nw u wr at our mercy to go to playoffs, we let be!! Like this you begging we giving!"

தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து, அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்.... தருகிறோம்.

இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனதால்... கடுப்பான இவர் 'இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்' என சபதம் போட்டார். (I am withdrawing from the film I have accepted and won't come back, she said),

சரி இப்போது இதை சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறீர்களா?

லால் சலாம் படத்தின் கதாநாயகியே இவர்தான்.

எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தலீவரை சங்கி இல்லையென்று கூறிய ஐஸ்வர்யா... இதற்கு என்ன பதில் கூறுவார்?

சினிமா ரசிகர்களே... உங்கள் வேலை... இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே. மற்றபடி வேறு எந்த கேள்வியும் கேட்காதீர்கள். எஞ்சாய் என தெரிவித்துள்ளார். 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி