தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நந்தன் திரைப்படத்தை பார்த்து அண்ணாமலை சொன்ன வார்த்தை! நெகிழ்ந்து நன்றிக் கூறிய இயக்குனர்!

நந்தன் திரைப்படத்தை பார்த்து அண்ணாமலை சொன்ன வார்த்தை! நெகிழ்ந்து நன்றிக் கூறிய இயக்குனர்!

Suguna Devi P HT Tamil

Oct 20, 2024, 10:32 AM IST

google News
கடந்த செப்டம்பர் 20 அன்று நந்தன் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனையடுத்து சில நாட்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இப்படத்தை பல அரசியல் தலைவர்களும் பார்த்து பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 20 அன்று நந்தன் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனையடுத்து சில நாட்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இப்படத்தை பல அரசியல் தலைவர்களும் பார்த்து பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 20 அன்று நந்தன் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனையடுத்து சில நாட்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இப்படத்தை பல அரசியல் தலைவர்களும் பார்த்து பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஒலிக்கும் குரல்களின் வரிசையில் உள்ளது திரைத்துறை. பல காலங்களாகவே திரை மொழி வாயிலாக மக்களின் வலிகளை எடுத்துரைப்பது தமிழ் சினிமாவில் அதிகமாக உள்ளன. அந்த வரிசையில் கடந்த செப்டம்பர் 20  அன்று நந்தன் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனையடுத்து சில நாட்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இப்படத்தை பல அரசியல் தலைவர்களும் பார்த்து பாராட்டி தெரிவித்து வருகின்றனர். 

நந்தன் 

கத்துக்குட்டி, உடன் பிறப்பே ஆகிய படங்களை இயக்கியவர் இரா.சரவணன். இவர் இயக்கத்தில் 'நந்தன்' படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் வெளியானது. மேலும் இப்படத்தில் சசிகுமாரின் நடிப்பை பல தரப்பினரும் பாராட்டி இருந்தனர். 

இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கதையின் கருவும், அது பேசிய அரசியலும் நிகழ்காலத்தில் பட்டியிலன மக்களின் உரிமை மறுக்கபட்ட வாழ்க்கையை பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், சிதம்பரம் தொகுதி எம். பி யான திருமாவளவனும் படத்தை பாராட்டியிருந்தார். தற்போது அந்த வரிசையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இப்படத்தினை பாராட்டியுள்ளார். 

அண்ணாமலை பாராட்டு 

இப்படம் குறித்தான தனது X தள பதிவில், 'OTT தளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.

 தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் திரு.சசிக்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் திரு. சரவணன்  அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த ‘நந்தன்’ திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இயக்குனர் நெகிழ்ச்சி 

இந்த பதிவினைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த அண்ணாமலைக்கு இயக்குனர் இரா. சரவணன் நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவில் கூறியதாவது,"உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார்… ‘நந்தன்’ படம் பார்த்து நீங்கள் பதிவிட்ட கருத்து, பட்டியலினப் பஞ்சாயத்து தலைவர்கள் மீதான அக்கறையைப் பெரிதாக்கி இருக்கிறது; ஒடுக்குமுறைகள் குறித்த விவாதங்களை தீவிரமாக்கி இருக்கிறது. ‘நந்தன்’ படத்தை பெரிய அளவில் பேசுபொருளாக்கி இருக்கிறது. பயணம், அரசியல், படிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மத்தியில் ‘நந்தன்’ படம் பார்த்து கருத்துச் சொன்னதற்கும், சமூக நீதிக்கான குரலைப் பெரிதாக்கியதற்கும் மனமார்ந்த நன்றி சார். 

மேலும் படத்தின் கதாநாயகன் சசிக்குமார் அதிக பணிகளுக்கு இடையே எங்களது படத்திற்கு வாழ்த்து தெரிவித்தற்காக நன்றி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் சிறப்பாக ஓடி வருகிறது. 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை