Bindu Madhavi: தொழிலதிபருடன் முதலில் டேட்டிங்! அப்புறம் காதல் - பிந்த மாதவி பேச்சு
May 11, 2023, 07:39 AM IST
த்ரிஷாவுடனான பிரேக்அப்புக்கு பின் வருண் மணியன், பிந்து மாதவியுடன் சில காலம் டேட்டிங்கில் இருந்தார். தற்போது அதை பிந்து மாதவி உறுதிபடுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்த த்ரிஷாவுக்கும், பிரபல தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் திருமண் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமண தேதி குறிக்கும் முன்னரே இவர்களுக்குள் பிரேக் அப் ஆனது.
இதையடுத்து வருண் மணியன் பிந்து மாதவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. இதைத்தொடர்ந்து த்ரிஷாவின் பிரேக்அப்புக்கு இதுதான் காரணமாக இருந்திருக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எதுவும் பேசாமல் இருந்து வந்த நடிகை பிந்து மாதவி, தற்போது முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஹைதரபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
"வருண் மணியனுடன் டேட்டிங்கில் இருந்தது உண்மைதான். ஆனால் அது வேறு காலகட்டத்தில் நடந்தது" என்றார். த்ரிஷாவுடனான பிரிவுக்கு பின்னரே டேட்டிங் செய்தீர்களா என்ற கேட்டபோது, "ஆம்" என்று உறுதி செய்தார்.
இதை வைத்து பார்க்கையில் த்ரிஷாவின் பிரிவுக்கு பிந்து மாதவி - வருண் மணியன் நெருக்கம் காரணம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் வருண் மணியன் - பிந்து மாதவி ஆகியோர் தற்போது காதலில் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.
தற்போது பிந்து மாதவி தெலுங்கில் நியூசன்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இது 20 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின் மதனபள்ளியில் நடந்த க்ரைம், அரசியல் கலந்து உருவாக்கப்பட்ட கதை. இந்த தொடர் மே 12ஆம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பிந்து மாதவி தற்போது ஒடிடி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதேபோல் த்ரிஷாவும் பொன்னியன் செல்வன் படத்தில் வெற்றியால் அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளை பெற்று மீண்டும் பிஸியான நடிகையாக மாறி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்