தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Biggboss 7 Tamil: ‘யப்பா டைட்டில் வின்னர்.. இதெல்லாம் அடுக்குமா?’

BiggBoss 7 Tamil: ‘யப்பா டைட்டில் வின்னர்.. இதெல்லாம் அடுக்குமா?’

HT Tamil Desk HT Tamil

Dec 11, 2023, 10:32 AM IST

google News
BiggBoss Tamil: ஆரம்பத்தில் இருந்தே, சரவணன் விக்ரம் மீது அடுத்தடுத்து கேமரா ஃபோக்கஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதள பதிவுகளிலும் சரவண விக்ரம் தான், ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
BiggBoss Tamil: ஆரம்பத்தில் இருந்தே, சரவணன் விக்ரம் மீது அடுத்தடுத்து கேமரா ஃபோக்கஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதள பதிவுகளிலும் சரவண விக்ரம் தான், ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

BiggBoss Tamil: ஆரம்பத்தில் இருந்தே, சரவணன் விக்ரம் மீது அடுத்தடுத்து கேமரா ஃபோக்கஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதள பதிவுகளிலும் சரவண விக்ரம் தான், ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த இரு நாள் எபிசோட் பார்த்து பலரும் கடுப்பாகி இருந்திருந்தாலும், ஸ்மால் பாஸ் வீடு ரொம்பவே ஹேப்பி. அதிலும், ‘டைட்டில் வின்னர்’ சரவண விக்ரம் கண்களில் அவ்வளவு ஆனந்தம். எபிசோட் முடிந்ததிலிருந்து ‘சந்திரமுகி அறைக்குச் சென்று வந்த டாக்டர் சரவணன்’ முகம் போல, அவ்வளவு பூரிப்பு சரவண விக்ரம் முகத்தில். 

ஸ்மால் பாஸ் வீட்டு முற்றத்தில் வழக்கம் போல திரண்டது மாயா அன் கோ. பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும், மாயா தான் அந்த ஸ்மால் பாஸ் வீட்டின் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். பெண் போட்டியாளர்களிடம் அலாதி அன்பு காட்டும் சரவண விக்ரம், அவர்களை பாராட்டி, சீராட்டி, தாலாட்டி உறங்க வைப்பதை தொடக்கத்தில் இருந்தே செய்து வருகிறார். 

அக்‌ஷயா, இப்போ அனன்யா என அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்போ மாயா, பூர்ணிமா இல்லையா? என்று கேட்டால், அவர்களுடன் அதிகமாகவே உரிமை எடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். சம்பவத்தன்று பூர்ணிமா, ரவீனா அருகே அமர்ந்திருந்த சரவண விக்ரம், பூர்ணிமாவை தன் தோளில் சாய்த்து, அவரை தாங்கி, அரவணைத்துக் கொண்டார். 

நீண்ட நேர அந்த உரையாடலில் கடைசி வரை டைட்டில் வின்னர், சுமை தாங்கியாக செயல்பட்டார். இடையிடையே சந்திரமுகி அறை சென்ற டாக்டர் சரவணன் பாணியில், ஆச்சரியமாகவும் பேசவும் செய்தார். 

ஆரம்பத்தில் இருந்தே, சரவணன் விக்ரம் மீது அடுத்தடுத்து கேமரா ஃபோக்கஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதள பதிவுகளிலும் சரவண விக்ரம் தான், ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ‘தன்னை யாரும் இயக்கவில்லை’ என்று அடிக்கடி அவர் கூறினாலும், அவரின் செயல்பாடுகள், ‘யாருக்கும் இயக்கவில்லை, அவரே இயங்குகிறார்’ என்பதைப் போல தான் தெரிகிறது. 

‘கிடைக்கிற கேப்ல கிடா வெட்றதே..’ இவருக்கு வேலையா  போச்சு என இந்த முறையும் விக்ரமை ஒருவழியாக்கிக் கொண்டிருக்கிறது சமூக வலைதளம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி