BiggBoss 7 Tamil: ‘கிரிமினல்ஸ் ட்ரைனிங் எடுத்து தான் பிக்பாஸ் போகனும்’ போட்டு தாக்கிய கூல் சுரேஷ்!
Dec 20, 2023, 12:04 PM IST
Cool Suresh Interview: ‘பிரதீப் தான் பட்டம் வெல்ல வேண்டிய போட்டியாளர். வெளியேறாமல் இருந்திருந்தால், அவன் தான் ஜெயித்திருப்பார்’
பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய பின், விஜய்டிவி இன்ஸ்டா பக்கத்தில் முதன் முறையாக நேரலையில் பேசினார் கூல் சுரேஷ். அப்போது அவர் பேசியதாவது:
‘‘பிக்பாஸ் வீட்டில் இரண்டு, மூன்று பேர் தான் உண்மையாக இருக்கிறார்கள். மற்றவர்களிடம் உண்மையில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதென்றால், கிரிமினல்களிடம், போலீசாரிடமும் பயிற்சி எடுத்து தான் செல்ல வேண்டும். அப்படி சென்றால் தான் விளையாட முடியும்.
நான் வீட்டு நியாபகத்தில் இருந்ததால் தான் விளையாட முடியவில்லை. விஷ்ணு உண்மையாக இருக்கிறான். அவன் தான் உண்மையான ஹீரோ, ஜால்ரா அடிக்க மாட்டான். தினேஷ் நேர்மையா இருக்கிறார். மணியும் தான் உண்டு, தான் வேலை என்று இருக்கிறான். மற்றவர்கள் எல்லாம் உண்மைக்கு அப்பாற்பட்டவர்கள் தான்.
விஷ்ணு, மணி, அர்ச்சனா, தினேஷ், விசித்ரா தான் உறுதியாக ப்ளையர்களாக உள்ளே உள்ளனர். ஆனாலும், மக்கள் வசம் தான் எல்லாம் இருக்கிறது. நீங்க பாருங்க, எதிர்பார்க்காத ஆள் தான் கப் அடிப்பாங்க. பிக்பாஸில் நான் கற்றுக் கொண்டது, பொறுமை. சகிப்புத் தன்மை வேண்டும். சகிப்புத் தன்மை இருந்தால் தான் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியும். நான் எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்; ஆனால் பிக்பாஸ் வீடு அப்படி இருக்காது.
ஹாஸ்டல் மாதிரி தான் பிக்பாஸ் வீடு இருக்கும். எந்த பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. எலிமினேட் ஆனவர்கள் ஆடை கூட, இன்னும் அங்கு காய்கிறது. நான் வெளியே வந்ததும், குடும்பத்தார் என் மீது கோபம் காட்டினார்கள். ஏன் வந்தீர்கள் என்று கேட்டார்கள். என்ன இருந்தாலும், குடும்பத் தலைவர் இல்லை என்றால் பிரச்னை தான்.
பிரதீப் தான் பட்டம் வெல்ல வேண்டிய போட்டியாளர். வெளியேறாமல் இருந்திருந்தால், அவன் தான் ஜெயித்திருப்பார். இறுதிப் போட்டியில் நானும் அவனும் இருந்திருந்தால், நானே அவன் கையை தூக்கியிருப்பேன். பிரதீப் தான் ஜெயிப்பான் என்று நம்பிக்கையில் இருந்தேன். காலத்தின் கட்டாயத்தில் அவன் வெளியே போய்விட்டான்.
ஏதோ ஒன்று தோண்டி, பூதம் வந்தது போல அவன் பிரச்னை ஆகிவிட்டது. பிக்பாஸ் எபிசோட் எதையும் நான் வெளியே வந்து பார்க்கவில்லை. என்னைப் பற்றி பேசியதை நான் கேட்டால், தேவையில்லாத சங்கடம் வரும். அதனால் பார்க்கவில்லை. ஆனால், என்னை சந்திப்பவர்கள் பலரும் என்னிடம், பல தகவல்களை கூறுகின்றனர்.
என்னுடைய அடுத்த திட்டம் என்ன என்பது தெரியவில்லை. வெளியே வந்த பின், மூன்று படங்கள் ஒப்பந்தமாகியிருக்கிறது. சந்தானம், எனக்கு நிறைய விசயங்கள் கூறியுள்ளார். பிக்பாஸிற்கு இவ்வளவு வேல்யூவா என்பது இப்போது தான் தெரிகிறது. குடும்ப ரசிகர்கள் எனக்கு முரட்டுத் தனமான வெறியர்களாக மாறியுள்ளனர். பெருமை, அந்த நிகழ்ச்சிக்கு தான்.
இன்று காசு, பணம் கிடைப்பதற்காக பொய் பேசி வாழ வேண்டாம். 5 பேரு சேர்ந்து பொய்யை உண்மையாக்கிவிடுவார்கள். கேட்டால் கேம் என்பார்கள். பணத்திற்காக தான் எல்லாம் செய்கிறார்கள். நாம என்ன தான் உழைத்தாலும், கூட்டணி போட்டு ஓரங்கட்டி விடுவார்கள். திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல், உள்ளே இருப்பதை விட, குடும்பத்தை பார்க்கலாம், வேலையை பார்க்கலாம் என்று தோன்றிவிட்டது.
நான் உள்ளே கூல் சுரேஷ் ஆக சென்றிருந்தால், நானும் இவற்றை பண்ணியிருப்பேன். நான் சுரேஷ் ஆக தான் போனேன். அதனால் தான், நான் அவற்றை செய்யவில்லை. இன்று வெளியே மற்றவர்கள் பேசுவதை கேட்கும் போது சந்தோசமாக இருக்கிறது. கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த சந்தோசம் கிடைக்காது. எனக்கு ஆதரவு அளித்த எல்லாருக்கும் நன்றி,’’
என்று அந்த பேட்டியில் கூல் சுரேஷ் கூறினார்.