திறமை இருக்கு சார் ஆனா வாய்ப்பு… பாரதி கண்ணம்மா கொடுத்த பாசம்.. அர்ச்சனா கொடுத்த காதல்? - அருண் பிரசாத் யாரு தெரியுமா?
Oct 06, 2024, 10:06 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருப்பவரும், முந்தைய சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனாவுடன் கிசுகிசுக்கப்பட்டவருமான அருண் பிரசாத் யார் தெரியுமா?
உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் 8
பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
சேலத்தை சேர்ந்த நடிகர் அருண் பிரசாத் விஷுவல் கம்யுனிக்கேஷன் பட்டதாரி. 2011ஆம் ஆண்டில் வெளியான 'நிகழ் காலம் ' என்ற குறும் திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து 'ஏதோ மாயம் செய்தாய்' ஏனோ வானிலை மாறுதே',' கள்ளன், ‘பகல் கனவு, அகப்பிழை போன்ற பல குறும் படங்களில் நடித்தார்.
2017ஆம் ஆண்டு ‘மேயாத மான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். ஆனால் அவருக்கு வெள்ளித்திரை பெரிதாக கை கொடுக்கவில்லை. இதனையடுத்து சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் லீடு ரோலில் நடிக்க கமிட் ஆனார்.
சின்னத்திரை அவரை ஏமாற்ற வில்லை. அந்த சீரியல் மூலமாக அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். ஆனால், இரண்டாவது சீசனில் அவர் நடிக்க வில்லை. தற்போது அவர் தீவிர சினிமா தேடலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவரும்,கடந்த பிக்பாஸ் சீசனில் டைட்டில் வென்றவருமான அர்ச்சனாவும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதனை பேட்டி ஒன்றில் அர்ச்சனா மறுத்து இருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்