பிக்பாஸ் வீட்டில் கட்டிப் புரளும் ஜோடி.. துடித்த ரஞ்சித்.. கொதித்த நெட்டிசன்கள்..
Oct 23, 2024, 01:18 PM IST
கில்லர் காய்ன் போட்டியில் ஆண்கள் அணி வெற்றி பெறுவதற்காக சுனிதாவை மடக்கிப் பிடித்த முத்துக்குமரனுக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
பிக்பாஸ் வீட்டில் நேற்று போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் 5 ஸ்டார் ஹோட்டல் போட்டியில் பங்கேற்றனர். இதில் முதலில் பெண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாக விளையாடினர். இதில் வாடிக்கையாளர்களாக வந்த ஆண்கள் அணி அதகளம் செய்திருப்பர்.
கில்லர் காய்ன் டாஸ்க்
இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் டெய்லி டாஸ்க் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில், ஒல்வர் காய்ன் எனும் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளில் இருந்து 7 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பெண்கள் அணியிலிருந்து அன்ஷிதாவும் ஆர்ஜே ஆனந்தியும் மேற்பார்வையாளர்களாக இருந்தனர் இந்தப் போட்டியில் பஸ்ஸர் அடிக்கும் போது கில்லர் காய்ன் வைத்திருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவர் என்ற விதிமுறையுடன் 5 முறை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, இல்வர் காய்னை வைத்திருக்கும் போட்டியாளர் அடுத்த அணியினர் மேல் இந்த காய்னை ஒட்ட வைக்க வேண்டும் அப்படி செய்தாய் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
நாமினேஷன் ஃபிரி பாஸ்
தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்படும் டெய்லி டாஸ்கில் வெற்றிபெரும் அணிக்கு நாமினேஷன் ஃப்ரி பாஸ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் வெற்றி பெறும் நோக்கத்தில் மிகவும் பயங்கரமாக விளையாடினர், ஆனால், போட்டி செல்லச் செல்ல ஆண்கள் தங்களின் உடல் பலத்தை காட்டத் தொடங்கினர்.
சுனிதாவை இறுக்கிப் பிடித்த முத்து
ஆண்கள் அணியிலிருந்த முத்துக் குமரன், சுனிதாவின் கழுத்தை இறுக்கப்பிடிந்து, கை, கால்களை நகர்த்த விடாமல் இருந்தார், இதனால் சுனிதா மூச்சுக்கூட விட முடியாமல் தவித்தார் போட்டியாளர்கள் எவ்வளவு கூறியும் சுனிதாவை முத்து பஸ்ஸர் அடிக்கும் வரை விடவில்லை. இதற் காரணமாக சுனிதா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
முத்துக் குமரனை பின்தொடர்ந்த ஆண்கள் அணி
பின், தொடர்ந்து விளையாடிய ஆண்கள் அணி, முத்துக் குமரனின் யுக்தியைப் பயன்படுத்தி, தங்களது பலத்தை நிரூபிக்க முயன்றனர். இதனால், பெண்கள் அணியினராய், இதனை தாக்குப் பிடிக்க முடியவில்லை, போட்டியிலிருந்து வெளியேறிய சத்யா கையில் காயின் இருப்பதால் அவரை போட்டிக்குள் ஆண்கள் அணி வருமாறு கூறினர். இதை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்த ஜாக்குலின் திட்டம் போடுகையில், பஸ்ஸர் அடித்ததால் அவரும் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பெண்கள் அணிக்காக விளையாடிய தர்ஷிகா, பவித்ரா சௌந்தர்யாவும் தங்களது முழு முயற்சியையும் பயன்படுத்தி விளையாடினர். ஆனால், அவர்கள் வட்ட வடிவில் இருந்தவாறே ஓடியதால் கீழே விழுந்து காய்னை இழந்தனர்.
ரஞ்சித்தை தாக்கிய தர்ஷா
இதற்கிடையில், ஆண்கள் அணிக்கு எதிராக பலத்தை காட்ட முடியாத தர்ஷா, ரஞ்சித்தின் பிறப்புறுப்பிலேயே அடித்துள்ளார். ஆண்கள் அணியினர் இதனை எடுத்துக் கூறிய பின் அமைதியான நிலையில், பின்னர் அருணையும் அதே போல் தாக்கியுள்ளார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட ரஞ்சித் மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின் இதுகுறித்து பேச ரஞ்சித் விருப்பமில்லை எனக் கூறிய பின்னும் தர்ஷா அவர் தவறு செய்ய வில்லை என்பதையே திரும்ப திரும்ப பேசி வந்தார்.
இதையடுத்து இந்த டாஸ்கில் ஆண்கள் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை பெண்கள் அணி ஏற்று கொள்ள முடியாமல் அவர்களுக்குள்ளே சண்டையிட்டு வந்தனர்.
கொதித்த நெட்டிசன்கள்
ஆனால் பிக்பாஸ் போட்டியில் நடந்த சில காட்சிகளை மட்டும் சோசியல் மீடியாவில் பரப்பிய நெட்டிசன்கள் முத்துக்குமரன் கனிதாவை இறுக்கி பிடித்து விளையாடியது தவறு. அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்