விஸ்வாசமா இருக்கணும்.. தேவையான இன்ஃபெர்மேஷன் குடுப்பேன்.. பரபரப்பாக தொடங்கும் பிக்பாஸ் 3வது வாரம்
Oct 21, 2024, 02:02 PM IST
பிக்பாஸ் வீட்டின் 3வது வாரத்தில் ஆண்கள் அணியிலிருந்து ஜெஃப்ரியும், பெண்கள் அணியிலிருந்து சாச்சனாவும் அணி மாறி விளையாட உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 8ன் 15வது நாளான இன்று, 3 வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது, இந்தமுறை போட்டியாளர்கள் ஆண்கள் அணி, பெண்கள் அணி என எந்த வேறுபாடும் இல்லாமல் நாமினேஷன் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்தது. இதையடுத்து தற்போது, ஆண்கள் அணியிலிருந்து ஜெஃப்ரியும், பெண்கள் அணியிலிருந்து சாச்சனாவும் வீடு மாறி சென்று தங்களது அணிக்காக விளையாடச் சென்றுள்ளனர்,
அணி மாறும் போட்டியாளர்கள்
முதல் வாரத்தில் பவித்ரா பெண்கள் அணியிலிருந்தும், முத்துக்குமரன் ஆண்கள் அணியிலிருந்தும் அணி மாறி விளையாடினர். இந்த சமயத்தில் பவித்ரா ஆண்களின் நாமினேஷனுக்கு உதவியதாக பெண்கள் அணியினர் குற்றச்சாட்டை வைத்தனர்.
இதையடுத்து, 2ம் வாரம் அணி மாறிய தர்ஷா குப்தா வந்த முதல் நாளே தனது ஆட்டத்தை ஆரம்பித்ததால் ஆண்கள் அணியினர் பெரும்பாலும் தங்களின் ஆலோசனையின் போது தள்ளியே வைத்திருந்தனர். இதனால் அணிக்குள் ஏகப்பட்ட கலவரமும் நடந்தது.
உறுதியாக பேசிய சாச்சனா
இந்நிலையில் தற்போது தொடங்கியுள்ள 3ம் வாரத்தில் பெண்கள் அணியிலிருந்து சாச்சனா ஆண்கள் அணிக்கு செல்ல உள்ளார். மேலும், ஆண்கள் அணியிலிருந்து ஜெஃப்ரி பெண்கள் அணிக்கு செல்கிறார். சாச்சனா ஏற்கனவே பல முறை ஆண்கள் அணியினர் கொடுத்த டாஸ்க்கை ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுதுள்ளார்,
தான் மிகவும் சின்னப் பெண், வீக்கானவர் என்றெல்லாம் பேசியுள்ளார். இவர் தற்போது பெண்கள் அணிக்காக விளையாட இருக்கும் நிலையில், ஆண்கள் அணியில் நடக்கும் முக்கிய தகவல்கள் குறித்து நான் பெண்கள் அணியிடம் கூறுவேன் என உறுதியளித்துள்ளார்.
விஸ்வாசம் முக்கியம்
அதேசமயம் ஆண்கள் அணியிலிருந்து பெண்கள் வீட்டிற்கு செல்லும் ஜெஃப்ரியிடம் விஸ்வாசம் மிகவும் முக்கியம் என ரஞ்சித் அறிவுரை சொல்லி அனுப்புகிரார். இதையடுத்து ஜெஃப்ரியை பெண்கள் அணி வலது கால் வைத்து வருமாறு வரவேற்றனர்.
ஆனால், ஆண்களோ, இந்த வீடோ உன்னுடையது தான் என சாச்சனாவிடம் கூறி உற்சாகமாக இந்த வாரத்தை தொடங்கியுள்ளனர். அணி மாறிய இவர்கள் அந்த வீட்டில் என்னென்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜெஃப்ரி மீது வைத்த குற்றச்சாட்டு
முன்னதாக, ஜெஃப்ரி தொடர்ந்து பெண்கள் அறையை பார்த்துக்கொண்டே இருக்கிறார் என ஜாக்குலின் குற்றம்சாட்டி, அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார். ஜாக்குலினின் இந்த செயலால் கொதித்த ஆண்கள் அணியினர் ஜெஃப்ரிக்கு ரெட் கார்டு கொடுக்க பெண்கள் அணி விளையாட்டை திசை திருப்புகிறார்கள் என குற்றம் சாட்டியது.
இந்நிலையில், பெண்கள் வீட்டிற்கு சென்றுள்ள ஜெஃப்ரி எப்படி விளையாடுகிறார், அங்குள்ள பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பாக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்