வீடியோ காலில் பேசி பழகினோம்.. தனுஷை கல்யாணம் பண்ணினது இப்படி தான்.. கலா மாஸ்டரால் வெளிவந்த உண்மை
Nov 08, 2024, 11:49 AM IST
வீடியோ காலில் பேசி பழகியதன் மூலம் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷை தனக்கு பிடித்து விட்டதாக மணமகள் அக்ஷயா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் தான். இந்த திருமண நிகழ்வில் பங்கேற்க சினிமா பிரபலங்கள் பலரும் ஜப்பானுக்கு படை எடுத்தனர். இது தொடர்பா வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கிங்ஸ் 24X7 யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
மக்கள் ஹீரோ நெப்போலியன்
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நெப்போலியன், 80,90களின் காலகட்டத்தில் இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்தன. இவரது பஞ்சு மிட்டாய் சேலைக் கட்டி பாடல் இன்றளவும் ட்ரெண்டிங். இப்படி, சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நெப்போலியனின் மகன் அரியவகை தடை பிடிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அவருக்கு இந்தியாவில் சரியான சிகிச்சை அளிக்க முடியாது என்பதால், குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.
மகனுக்கு திருமணம் ஏற்பாடு செய்த நெப்போலியன்
அங்கு அவர், ஐடி கம்பெனி உருவாக்கி பல தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தார். பின் இந்த பொறுப்புகளை எல்லாம் மூத்த மகன் தனுஷின் கையில் ஒப்படைத்தார்.
இந்நிலையில், நெப்போலியன் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் வசிக்கும் அக்ஷயா என்ற பெண்ணை தனது மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் செய்ய நிச்சயித்தார். இதுதொடர்பான தகவலை அவர் சோசியல் மீடியாவில் தெரிவித்தார்.
வேதனையடைந்த நெப்போலியன்
இதற்கு சில தரப்பினர் வாழ்த்துகள் கூறிய நிலையில், பலரும் மிக மோசமான கமெண்ட்டுகளை கூறி வந்தனர். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த நெப்போலியன் பிறரின் மனதை நோகடிக்க வேண்டாம். எங்களை வாழ விடுங்கள் என மிக உருக்கமாக பேசி இருந்தார். இதையடுத்து, தற்போது மகனின் சந்தோஷமே தனக்கு முக்கியம் என முடிவு செய்து திருமண ஏற்பாடுகளை தீவிரமாக்கி வந்தார்.
மூலகரைப்பட்டி டூ ஜப்பான்
முதலில் மூலக்கரைப்பட்டியில் திருமணத்தை நடத்தலாம் என நினைத்த நெப்போலியன், தனுஷால் விமானத்தில் பயணம் செய்ய முடியாததால் அதைத் தவிர்த்தார். பின், தனுஷின் விருப்பப்படி ஜப்பானில் திருமணத்தை நடத்த தயாரானார்.
இதற்காக, அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டது முதல், ஒவ்வொரு நாள் சடங்குகள், திருமணம் வரை அனைத்தையும் சோசியல் மீடியாவில் மிகுந்த சந்தோஷத்தோடு பதிவு செய்தார்.
கோலாகலமான தனுஷின் கல்யாணம்
இந்த திருமணத்தை கோலாகலமாக தமிழ் முறைப்படி நடத்த விரும்பிய நெப்போலியன், தனது மகன் திருமணத்திற்கு வரும் பிரபலங்களின் பயண செலவுகள் மொத்தத்தையும் ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நெப்போலியன் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு குஷ்பு, மீனாவுடன் சேர்ந்து நடனமாடி அசத்தி இருப்பார்.
திருமணம் முடிந்த பின், நடன இயக்குநர் கலா மாஸ்டர் மணமகள் அக்ஷயாவை பேட்டி எடுத்திருப்பார். அதில், நீங்கள் எப்படி தனுஷை கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னீர்கள் என கேள்வி எழுப்பினார்.
வீடியோ காலில் பேசி கல்யாணம்
அதற்கு பதிலளித்த அக்ஷயா, திருமணத்திற்கு முன் தனுஷூடன் வீடியோ காலில் பேசினேன். அப்படியே பேச பேச அவரைப் பிடித்துப் போய்விட்டது என்றார். அதுமட்டுமல்லாமல், திருமணம் முடிந்த பின் அக்ஷயாவை நடனமாட கலா மாஸ்டர் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அவர் அதனை மறுத்துவிட்டாராம், இருந்தபோதிலும், தனுஷ் நடனமாடுமாறு கூறிய உடனே அவர் நடனமாடினாராம். இதைப் பார்த்த கலா மாஸ்டர் இதுதான் கணவன் மனைவிக்கான அன்னோன்யம் என குறிப்பிட்டிருக்கிறார் என பயில்வான் ரங்கநாதன் கிங் 24X7 யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
டாபிக்ஸ்