தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan Ranganathan: ‘விடாது கருப்பு.. 21ம் தேதியோடு ஆட்டம் க்ளோஸ்..’ பயில்வானின் ‘பன்ச்’ அட்டாக்!

Bayilvan Ranganathan: ‘விடாது கருப்பு.. 21ம் தேதியோடு ஆட்டம் க்ளோஸ்..’ பயில்வானின் ‘பன்ச்’ அட்டாக்!

Oct 01, 2023, 05:10 AM IST

google News
Seeman Vijayalakshmi: ‘சும்மா இருந்த சங்கை ஊதுது விஜயலட்சுமி. 13 வருசமா விஜயலட்சுமி கூட பேசவில்லை என்கிறார் சீமான். பெங்களூரு போய், அங்கிருந்து தற்கொலை மிரட்டல் விடுது விஜயலட்சுமி’
Seeman Vijayalakshmi: ‘சும்மா இருந்த சங்கை ஊதுது விஜயலட்சுமி. 13 வருசமா விஜயலட்சுமி கூட பேசவில்லை என்கிறார் சீமான். பெங்களூரு போய், அங்கிருந்து தற்கொலை மிரட்டல் விடுது விஜயலட்சுமி’

Seeman Vijayalakshmi: ‘சும்மா இருந்த சங்கை ஊதுது விஜயலட்சுமி. 13 வருசமா விஜயலட்சுமி கூட பேசவில்லை என்கிறார் சீமான். பெங்களூரு போய், அங்கிருந்து தற்கொலை மிரட்டல் விடுது விஜயலட்சுமி’

மீண்டும் சூடுபிடித்திருக்கும் சீமான்-விஜயலட்சுமி விவகாரம் குறித்து பேட்டி ஒன்றுக்கு பதிலளித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இதோ அந்த பேட்டி:

‘‘நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கு, சந்திரயான் அனுப்புனாங்க, அது இன்னும் போட்டோ அனுப்பமாட்டேங்குது; தொடர்பு விட்டுபோச்சு. முயற்சி பண்ணிட்டு இருக்கோம்னு சொல்றாங்க, அதை பத்தி யாருமே பேசுறது இல்ல.

காவிரியில் தண்ணி விடல, பெங்களூருவில் பந்து நடக்குது, தமிழ்நாட்டில் அதை கண்டுக்கிறதே இல்ல. மின்சார கட்டணம் ஏறி போச்சு, வரி ஏறிடுச்சு, இதை பத்தி கவலைப்படாமல், சீமான் ஏன் இப்படி பண்ணார், விஜயலட்சுமி ஏன் இப்படி செய்தார் என்று தெரிவதில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள். 

2011 ம் ஆண்டில் சீமான் மீது கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் அளித்தது. ஆள்மாறாட்டம், மோசடி, தில்லுமுல்லு ஆகிய வழக்குளில் பதிவு செய்யப்பட்டது. பெண்களுக்கு எப்போதும் அலைபாயும் எண்ணம் உண்டு. நான் குறை சொல்வதாக நினைக்க கூடாது. விஜயலட்சுமி மாதிரி பெண்களைப் பற்றி பேசுகிறேன். 

சீமான் திருமணம் பண்ணும் போது, இந்த விஜயலட்சுமி போய் தடை பண்ணியிருக்கலாமே? அப்போ கொடுக்கல், வாங்கல் நடந்திருக்கு. 4 நாட்களில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிடுச்சு. போலீஸ் அப்பவே ஃபைலை மூடியிருக்க வேண்டும். அவர்கள் பண்ணவில்லை, நிலுவையில் இருந்தது. 

மறுபடி இப்போ வந்து புகார் அளித்து, மீண்டும் வாப்ஸ் வாங்கிட்டார். வஞ்சப்புகழ்ச்சியா சீமானை புகழ்ந்துவிட்டு சொந்த ஊருக்கு கிளம்பியது விஜயலட்சுமி. அப்புறம் அங்கே போய், சீமான் என்னிடம் பேசினார், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார் என்று பேசுது. 

சும்மா இருந்த சங்கை ஊதுது விஜயலட்சுமி. 13 வருசமா விஜயலட்சுமி கூட பேசவில்லை என்கிறார் சீமான். பெங்களூரு போய், அங்கிருந்து தற்கொலை மிரட்டல் விடுது விஜயலட்சுமி. சீமான் பார்த்தார், இது சரியா வராது என்று தனது வக்கில் மனைவி உடன் சேர்ந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்ததோ, விஜயலட்சுமிக்கும் நோட்டீஸ் அனுப்புறாங்க.

21 ம் தேதி விஜயலட்சுமியை ஆஜர் ஆகச் சொல்லியிருக்காங்க. சீமானும் சரி, விஜயலட்சுமியும் சரி, மாறி மாறி இந்த பிரச்னையை முடிக்க மாட்றாங்க. ஆனால் சீரியல், 21 ம் தேதிக்குள் முடிந்துவிடும். நான் வாக்கிங் போகும் போதெல்லாம், ‘சார், சீமான் மீது தப்பா? விஜயலட்சுமி மீது தப்பா?’ என்று கேட்கிறார்கள். இது தான் நாட்டுல இருக்கிற பிரச்னையா? என்று அவர்களை கடிந்து கொள்கிறேன்,’’

என்று அந்த பேட்டியில் பயில்வான் பேசியுள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை