Bayilvan Ranganathan: ‘நடிகைக்கு அங்கு தையல் போட வைத்த நடிகர்’ பயில்வான் சொன்ன ஷாக்!
Jun 26, 2023, 06:00 AM IST
பல ஷூட்டிங்கில் 8 மணிக்கெல்லாம் பேக்கப் பண்ணிடுவார். ஈசிஆர் ரோட்டில் பண்ணை வீடு ஒன்று அவருக்கு உள்ளது. தன்னுடன் நடித்த நடிகைகளை காரில் அங்கு அழைத்துச் செல்வார்.
சினிமா நடிகர், நடிகைகள் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் யூடிப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது:
‘‘அஜால், குஜால் நடிகைகளுக்கு வாய்ப்பளித்த அந்த காமெடி புயலான நடிகர் பற்றி பலருக்கு தெரியாத விசயம் இருக்கு. சாதாரண கண்ணாடி ப்ரேம் கடையில் கூலி வேலை செய்து வந்த அந்த நடிகர், அதுக்கு பின்னால் தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரின் இடத்தில் தான் உண்டு, உறங்கி வந்தார்.
சோத்துக்கே வழியில்லாமல் இருந்தார் அந்த நடிகர். தன்னுடைய நண்பர் மூலமாக எலும்பு கடி இயக்குனரிடம் அறிமுகமானார். சாவு குத்துக்கு டான்ஸ் ஆடுவதில் கை தேர்ந்தவராக அப்போது அந்த காமெடி நடிகர் இருந்தார். அதை பார்த்து தான், அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
எல்லாருக்கும் எடுபிடி வேலைக்கு தான் முதலில் அந்த நடிகர் பணியமர்த்தப்பட்டார். எனக்கும் அந்த காமெடி நடிகர் டீ கொடுத்திருக்கிறார். அப்படி அடிப்படையில் வேலை செய்து, இறுதியில் உழைப்பால் தான் உயர்ந்தார் அந்த புயல் நடிகர்.
நட்சத்திர நடிகராக அவர் மாறிய பின், யாரை ஜோடியாக போட வேண்டும் என்பதை அவர் தான் சிபாரிசு செய்தார். ஒரு நடிகைக்கு இரண்டு படங்களில் தான் வாய்ப்பு தருவார். மூன்றாவது படத்திற்கு வேறு பெண்ணை மாற்றிவிடுவார். புதுசு புதுசா அவரது சுவை மாறுபட்டிருக்கும்.
உட்ச நட்சத்திரத்தின் படத்தில் அந்த காமெடி நடிகருக்கு ஜோடியாக வேறு ஒரு நடிகையை போட முடிவு செய்திருந்தார், லகலக இயக்குனர். ஆனால் அதை தடுத்த அந்த காமெடி நடிகர், அவர் ஒரு நடிகையை பரிந்துரை செய்து, அவரை தான் இறுதியில் நடிக்க வைத்தார். அதை அந்த நடிகையே சொல்லியிருக்கிறார்.
பல படங்களில் கவர்ச்சி நடனமாடிய இரண்டு எழுத்து நடிகையை, உச்ச நட்சத்திர நடிகரின் மற்றொரு படத்தில் தனக்கு ஹீரோயினாக போட வைத்தார் புயல் நடிகர். சும்மா ஒன்னும் கொடுக்கல, வாங்கி தான் கொடுத்தார்.
பல படங்களில் கதாநாயகியாக நடித்த 80களின் முன்னணி நடிகை, அந்த காமெடி நடிகரிடம் கெஞ்சி, கூத்தாடி வாய்ப்பை பெற்றார். இது பலருக்கு தெரியும். அந்த நடிகையுடன் இன்பம் அனுபவிப்பதற்காக அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் என அப்போது செய்திகளே வந்தது.
அந்த கிசுகிசுவை இருவருமே மறுக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். அதே போல தான, கொங்கு நடிகைக்கும் தொடர்ந்து வாய்ப்பு தர, தன்னை திருப்திப்படுத்த சொன்னவர் தான் அந்த புயல் நடிகர். அந்த நடிகை திருமணம் ஆகாமல் இருப்பதற்கும், இந்த நடிகர் தான் காரணம்.
அதே போல, அரச வேடத்தில் அந்த நடிகர் நடித்த காமெடி படத்தில் நடித்த அந்த நடிகையை, கசக்கி பிழிந்துவிட்டார் நடிகர். அதே போல பலம்பெரும் நகைச்சுவை நடிகர் ஒருவரின் மகளை, அந்த நடிகருக்கு கதாநாயகியாக்கி, பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்தது. நானும் அதில் நடித்தேன்.
நள்ளிரவில் திடீரென பயங்கர சத்தம். என்னவென்று பார்த்தால் அந்த நடிகையை பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின் விசாரித்த போது, ரகசிய உறுப்பில் தையல் போட்டதாக கூறினார்கள். சமயத்தில் வெறித்தனமாகவும் அந்த நடிகர் இறங்கிவிடுவார்.
பல ஷூட்டிங்கில் 8 மணிக்கெல்லாம் பேக்கப் பண்ணிடுவார். ஈசிஆர் ரோட்டில் பண்ணை வீடு ஒன்று அவருக்கு உள்ளது. தன்னுடன் நடித்த நடிகைகளை காரில் அங்கு அழைத்துச் செல்வார். மீண்டும் மறுநாள் காலை 4 மணிக்கு தான் அழைத்து வருவார். இடையின் என்ன நடந்தது என்பது அந்த காமெடி நடிகருக்குத் தான் தெரியும். எல்லாவற்றையும் மேலே இருப்பவன் தான் பாக்குறான்’’
என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.