Bayilvan Ranganathan: ‘காப்பர்-டி அணிந்து வந்த நடிகை..’ மீண்டும் அத்து மீறும் பயில்வான்!
Jun 20, 2023, 06:41 PM IST
திருமணத்திற்கு முன் அந்த நடிகை ஒரு முறை விபத்தில் சிக்கிக் கொண்ட போது, அவரை பரிசோதித்த மருத்துவர் ஷாக் ஆனார். காரணம் அந்த நடிகை காப்பர்-டி போட்டிருந்தார்.
பயில்வான் ரங்கநாதன் வாயைத் திறந்தால், ஏதாவது ஒரு நடிகையின் அந்தரங்க விசயம் வெளிச்சத்திற்கு வரும் என்று அர்த்தம். அதில் உண்மையிருக்கிறதா, இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம். இந்த நிலையில் முன்னணி நடிகை ஒருவரைப் பற்றி புதிய தகவல்களை தனது பாணியில் பகிர்ந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இதோ வீடியோவில் அவர் பேசியவை:
‘‘நடிகைகள் அதிலும் சினிமா நடிகைகள் என்றாலே கிசுகிசுக்கள், வதந்திகள், பரபரப்பான விசயங்கள் நிறைய உண்டு. அந்த வகையில் முதலிடம் பிடிப்பவர் ஜூனியர் புன்னனை அரசி. அதென்ன புன்னகை அரசி? சீனியர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா. அந்த காலத்தில் கே.ஆர்.விஜயா சிரித்தாலே பலர் சிரித்துவிடுவார்கள். அந்த மாதிரி தான் நான் சொல்ல வரும் நடிகை ஜூனியர் புன்னகை அரசி.
இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல எங்கு போனாலும் பேமிலி லுக் அவருக்கு இருக்கும். அதனால் பிரபல கடைகளின் விளம்பரத்தில் அவர் வருவார். அவர் ஒரு இரவு க்ளப் பார்ட்டிக்கு போனது போது, அங்கு பார்த்தவர் தான் தன்னை சினிமாவிற்கு அழைத்ததாக அவரே கூறியிருந்தார்.
நிறைய பேர் அந்த நடிகையை தெலுங்குகாரர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு பண்ரூட்டிக்காரர். ஆரம்பத்தில் அவருக்கு வேறு ஒரு தயாரிப்பாளர் உடன் நிச்சயதார்த்தம் நடந்தது. பசை உள்ள பார்ட்டி அவர். நிச்சயதார்த்தத்திற்கு வைர மோதிரம் எல்லாம் போட்டார்.
நிச்சயம் ஆன இரண்டாவது வாரத்திலேயே செய்தியாளர்களை சந்தித்த அந்த நடிகை, அவரை திருமணம் செய்யப் போவதில்லை என்று அறிவித்தார். அதற்கு பிறகு தான் அந்த நடிகரை காதலித்தார், திருமணம் செய்தார், இரு குழந்தைகளுக்கு தாய் ஆனார்.
கர்ப்பிணியாக இருக்கும் போதே தனுஷ் உடன் நடித்தார். எந்த பாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வார். திருமணத்திற்கு முன் அந்த நடிகை ஒரு முறை விபத்தில் சிக்கிக் கொண்ட போது, அவரை பரிசோதித்த மருத்துவர் ஷாக் ஆனார். காரணம் அந்த நடிகை காப்பர்-டி போட்டிருந்தார். கருத்தடை மாத்திரை போட்டால் திருமணம் ஆன பின் கருத்தரிக்க பிரச்னை வரலாம் என்பதால், அவர் காப்பர்டி போட்டுக் கொண்டார். அது எந்த நடிகையும் செய்யாத துணிச்சலான, சாணக்யத் தனம்.
எந்த நடிகருடனும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போகும் அளவிற்கு நடிக்கும் நடிகை அவர். அது எந்த நடிகராக இருந்தாலும சரி தான். எந்த கிசுகிசுயைம் பொருட்படுத்தாதவர் அந்த நடிகை. காய்ச்ச மரம் கல்லடி படும் என்று அவருக்கு தெரியும். நான் பேமஸா இருக்கேன், நீங்க எழுதுறீங்க என்று கடந்து போவார்.
ஒல்லியாகவும், உடல் மெலிந்தும் போன அந்த நடிகை, ஆந்திராவிற்கு போன பிறகு மெருகு ஏறி, கலர் மாறியது. பொதுவாகவே ஆந்திரா செல்லும் நடிகைளுக்கு அது நடக்கும். அது அந்த நடிகைக்கும் நடந்தது. மேலும், அங்கு பல நடிகர்களுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார்.
குடும்ப குத்து விளக்காக நடித்த அந்த நடிகை, செல்வராகவன் படம் ஒன்றில் விலை மாதுவாக அச்சு அசலாக நடித்து புகழ் பெற்றார். எத்தனையோ நடிகைகள் விலை மாதுவாக நடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அவ்வாறு நடித்த பின் கெட்ட பெயர் வந்துவிடும். ஆனால் அந்த நடிகைக்கு விலைமாது கதாபாத்திரத்தில் நடித்ததற்கு கை தட்டல் கிடைத்தது.
திருமணத்திற்குப் முன் நடிகருடன் 50 நாட்கள் வாழ்ந்த அவர், பின்னர் அதே நடிகரை திருமணமும் செய்து கொண்டார்,’’
என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
(பயில்வான் அந்த நடிகையின் பெயரை குறிப்பிட்டு இந்த தகவல்களை பேசியிருந்தாலும், அந்த நடிகையின் பெயரை பொதுவெளியில் வெளியிட மனமில்லாமல் தவிர்க்கிறோம்)
டாபிக்ஸ்