(5 / 7)நடிகை வனிதா விஜயகுமார் 1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். அதன்பின், வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்திருந்தவர். அதன்பின், அவர் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பரபரப்பினை ஏற்படுத்தியவர். சமீபத்தில் நடித்த தண்டுபாளையம் படத்திலும் பயங்கர வில்லியாக நடித்திருந்தார், வனிதா விஜயகுமார். 2000ஆம் ஆண்டு, டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டார், வனிதா விஜயகுமார். அதன்பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர். அவரது மகன் தந்தையும் டிவி நடிகருமான ஆகாஷூடன் வாழ்ந்து வருகின்றார். அடுத்து ஆனந்த் ஜெய்ராயன் என்பவரை, திருமணம் செய்துகொண்டார், வனிதா விஜயகுமார். 2012ஆம் ஆண்டு இவரையும் விவாகரத்து செய்தார், வனிதா விஜயகுமார். 2020ஆம் ஆண்டு, ஜான் பீட்டர் என்னும் விசுவல் கம்யூனிகேஷன் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார், வனிதா விஜயகுமார். ஆனால், ஜான் பீட்டரின் முதல் மனைவி கொடுத்தப்புகாரினால், வனிதா விஜயகுமார் ஜான்பீட்டருடனும் இருந்து பிரிந்துவிட்டார்.