தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bala Pithamagan: அனிமல் பிளானட்தான் ரெஃபரன்ஸ்.. பாலா உருவாக்கிய மிருகம்.. நொறுங்கிய ஒரிஜினல் டீக்கடை! - ஸ்டண்ட் சிவா!

Bala Pithamagan: அனிமல் பிளானட்தான் ரெஃபரன்ஸ்.. பாலா உருவாக்கிய மிருகம்.. நொறுங்கிய ஒரிஜினல் டீக்கடை! - ஸ்டண்ட் சிவா!

Jul 25, 2023, 05:30 AM IST

google News
‘பிதாமகன்’ திரைப்படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தைவடிவமைத்தது குறித்து ஸ்டண்ட் சிவா பேசியிருக்கிறார்.
‘பிதாமகன்’ திரைப்படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தைவடிவமைத்தது குறித்து ஸ்டண்ட் சிவா பேசியிருக்கிறார்.

‘பிதாமகன்’ திரைப்படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தைவடிவமைத்தது குறித்து ஸ்டண்ட் சிவா பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “பொதுவாக திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பதற்கு சில ஹாலிவுட் திரைப்படங்கள், கொரியன் திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்ப்பது வழக்கமான ஒன்று.

ஆனால் பாலா இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் சூர்யா சங்கீதா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்திற்கு அந்த மாதிரியான எந்த ஒரு ரெஃபரன்ஸையும் நாங்கள் எடுக்கவில்லை. 

அந்த முழு படத்தையுமே நாங்கள் அப்படித்தான் அணுகினோம். அந்தப் படத்திற்காக நான் அனிமல் பிளானட் மற்றும் ஜியோகிராபி ஆகிய சேனல்களில் ஒளிப்பரப்பான காட்சிகளைத்தான் ரெஃபரன்ஸாக எடுத்து கொண்டோம். காரணம் அந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு சிறுவயதில் இருந்து எதுவுமே தெரியாது. காரணம் அவன் ஒரு வெட்டியான். 

ஒரு கடைக்குச் சென்றால் கூட காசு கொடுத்து தான் உணவை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று கூட அவனுக்குத் தெரியாது. ஏதோ வருவான் அவன் போக்கில் உணவு எடுத்து சாப்பிடுவான். அந்த அளவுக்கு தான் அவனுக்கு அந்த படத்தில் அறிவு இருந்தது. அப்படித்தான் அந்த படத்தில், ஒரு இடத்தில் பரோட்டோ கடைக்கு வரும் அவன் யாரிடமும் எதையும் கேட்காமல் அந்த பரோட்டாக்களை எடுத்துச் சாப்பிடுவான். 

சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் கிளம்புவான். இதையடுத்து அங்கு ஒரு ஆக்ஷன் ப்ளாக் இருக்கும். அவன் மற்றவர்களை அடிப்பான்; அவன் ஒரு விலங்கு போன்று தான் அந்த படத்தில் இருப்பான்.

அவனுக்கு எப்படி குத்த வேண்டும், எப்படிஅடிக்க வேண்டும் உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியாது. அப்படித்தான் அந்த ஆக்சன் ப்ளாக்கில் விக்ரமை ஒரு விலங்கு போல நாங்கள் சித்தரித்தோம்.  

அந்தக்காட்சிக்காக  நாங்கள் ஒரு ஒரிஜினல் டீக்கடையையே எடுத்து அந்த சண்டைக்காட்சியை வடிவமைத்தோம். அதில் உடைபட்ட எல்லா கண்ணாடிகளுமே ஒரிஜினல் கண்ணாடிகள் தான். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸில் சண்டை நடந்து கொண்டிருக்கும் அப்போது அவன் அங்கு சென்று தண்ணீர் குடிப்பார். தொண்டைக்கு ஒரு ஷாட் வைக்கப்பட்டிருக்கும். அது எல்லாமே விலங்கிடம் இருக்கும் ரெஃபரன்ஸ்” என்று பேசினார் 

நன்றி: டூரிங் டாக்கீஸ்!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி