தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bade Miyan Chote Miyan: ஹுக்லைன் இசை ..அனிருத் வாய்ஸ்.. ‘படே மியன் சோட்டே மியன்’ பாட்டு எப்படி இருக்கு ?

Bade Miyan Chote Miyan: ஹுக்லைன் இசை ..அனிருத் வாய்ஸ்.. ‘படே மியன் சோட்டே மியன்’ பாட்டு எப்படி இருக்கு ?

HT Tamil Desk HT Tamil

Feb 21, 2024, 03:50 PM IST

இந்த பாடலில் வித்தியாசமான ஒலியை விஷால் மிஷ்ரா பயன்படுத்தியுள்ளார். இதற்கு அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து ஆடி பாடலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர்.

அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘படே மியன் சோட்டே மியன்’. இந்தப்பாடலின் டைட்டில் டிராக் வெளியாகி மக்களிடம் கவனம் பெற்று வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Raavanan: கடினமாக இருந்த மணிரத்னம் படப்பிடிப்பு.. அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா! ராய்!

GV Prakash, Saindhavi: "ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும்.. இனியும் இது தொடரும்" - சைந்தவி போட்ட திடீர் போஸ்ட்!

Ilaiyaraja Symphony: 35 நாள்களில் சிம்பொனி இசை..! விடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த இளையராஜா

Lekha Washington: பாலிவுட் நடிகருடன் டேட்டிங்! ரெமாண்டிக் புகைப்படம் பகிர்ந்து ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்த லேகா வாஷிங்டன்

அபுதாபியின் ஜெராஷ்-ல் உள்ள மிக அழகிய ரோமன் தியேட்டர் பின்னணியில் படமாக்கப்படும், முதல் பாடல் என்ற பெருமையை இந்த பாடல் பெற்று இருக்கிறது. இந்த பாடலில் 100க்கும் அதிகமான கலைஞர்கள் ஆடி இருக்கின்றனர்.

இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர். இதற்கு பாஸ்கோ - சீசர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இர்ஷாத் கமில் இந்த பாடலை எழுதி இருக்கிறார்.

இந்த பாடல் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி பேசும் போது, "படே மியன் சோட்டே மியன் பாடல் இளைஞர்களை கவரும் வகையில் பிரமாண்ட காட்சிகளை கொண்டிருக்கும்.

இந்த பாடலில் வித்தியாசமான ஒலியை விஷால் மிஷ்ரா பயன்படுத்தியுள்ளார். இதற்கு அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து ஆடி பாடலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர். 

அனைவரும் ரசிக்கும் படி இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். இந்த பாடலின் ஹுக்லைன் இசை பிரியர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும்," என்று பேசினார். 

ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து, படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன. இந்த படத்தை அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கியுள்ளார். வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி