‘கங்குவா தமிழ் மொழியில் உருவான பாகுபலி’.. சூர்யாவின் மாஸ் பேச்சால் எகிறும் எதிர்பார்ப்பு..
Nov 12, 2024, 04:46 PM IST
கங்குவா படத்தின் மற்றொரு டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழியில் உருவாகியுள்ள பாகுபலி திரைப்படமாக இது இருக்கும் என இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரு மடங்காகியுள்ளது.
கங்குவா படத்தின் ரிலீஸ் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3டி யில் அசத்தப்போகும் படம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படம் 3டி தொழில் நுட்பத்திலும் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் ஏற்தனவே வெளியாகி உள்ள நிலையில், தற்போது படம் வெளியாகும் 4 நாட்களுக்கு முன் ரிலீஸ் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
எதிர்கொள்வோம்.. எதிரி கொல்லுவோம்
அந்த ட்ரெய்லரின் தொடக்கத்தில், "கருங்காட்டு புலிக்கூட்டம் ஒன்னா உறும்புச்சுனா.." என்ற டயலாக்வுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ட்ரெய்லரில் "எதிர்கொள்வோம்.. எதிரி கொல்லுவோம்.." எனும் வசனங்களுடன் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் கங்குவா படத்தில் ஆக்சன் காட்சிகளைக் காண ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.
கங்குவா இன்ஸ்பிரேஷன்
பிரேவ் ஹார்ட், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ், அபோகலிப்டோ போன்ற படங்கள் தான் 'கங்குவா' படத்தை உருவாக்க உத்வேகம் அளித்துள்ளது. அவற்றை நான் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போ அப்படி ஒரு படம் பண்ணியிருக்கோம். தமிழில் வரும் கங்குவாவும் பாகுபலி மாதிரி படம் என்று மீடியாக்கள் விளம்பரப்படுத்துகின்றன " என நடிகர் சூர்யா பேசியுள்ளார். இது குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே படத்தின் புரொமோஷனில் தெரிவித்தபடி படத்தில் தற்கால காட்சிகள் மற்றும் 700 ஆண்டுக்கு முந்தைய காலத்தில் கங்குவா தேசம் காட்சிகள் என ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டுள்ளது. வெறும் 1.30 நிமிடங்கள் மட்டும் ஓடும் இந்த ட்ரெய்லர் படம் மீதான ஆர்வத்தை மேலும் எகிற வைத்துள்ளது.
கங்குவா சென்சார்
கடந்த இரு நாள்களுக்கு முன் கங்குவா படத்துக்கு சென்சார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டடிருக்கும் நிலையில், படம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்குவா படத்தின் கதை
கங்குவா படத்துக்கு 700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகத்தை சிறுத்தை சிவா உருவாக்கி உள்ளார். அங்கு 3 தெய்வங்களை வழிபட்டு வந்த மக்களுக்குக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் யுத்தமாக மாறுகிறது. இதில் யார் வெல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதையாக உள்ளது.
கங்குவாவின் உலகம் நெருப்பை கடவுளாக கும்பிடுகிறார்கள். அதேபோல் ரத்தத்தை கடவுளாக வணங்கிறார்கள் உதிரனின் உலகம். நீரை கடவுளாக வழிபடும் மக்கள் இருக்கிறார்கள். இந்த மூன்று உலகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியை பேண்டஸி, ஆக்ஷன் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.
டாபிக்ஸ்