Ayali: ‘தாலி கட்டும் காட்சி பிடிக்கவில்லை’ உள்ளம் திறந்த ‘அயலி’ அபி நக்ஷத்ரா!
Feb 01, 2023, 05:45 AM IST
Ayali Abi nakshatra Interview: அயலியில் வரும் தலைமை ஆசிரியை போல நான் யாரையும் பார்த்ததில்லை. என் அம்மா தான் எனக்கு தலைமை ஆசிரியை. அவருக்கு தான் அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும். நான் கடந்த எந்த ஆசிரியையும் எனக்கு அந்த அளவிற்கு ஆதரவு தர இல்லை.
மூக்குத்தி அம்மன் படம் மூலம் பிரபலமானவர் அபி நக்ஷத்ரா. தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்படும அயலி வெப்சீரிஸின் நாயகி. படத்தில் தனது அனுபவம் குறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி இதோ:
‘‘அயலி வெப்சீரிஸில் நடித்ததில் ரொம்ப பெருமையாக இருக்கிறது. இது ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரிஸ், அதில் நான் முக்கிய ரோலில் நடித்தது எனக்கு பெருமை தான்.
படப்பிடிப்பிற்கு முன்பே கிராமத்தில் தங்கி, கிராம மக்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் பேச்சு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன். நான் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொண்ணு. நான் நடிக்க புறப்படும் போதே, உறவினர்கள் மத்தியில் ஒரு விதமான எதிர்ப்பு வந்தது.
அப்பா, அம்மாவுக்கு நிறைய அழுத்தம் வந்தது. எனக்கு இது பிடித்திருந்ததால், எனக்காக தான் அவர்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்கிறார்கள். பள்ளி நாட்களில் நான் விடுமுறை எடுத்துவிட்டால், ‘ஷூட்டிங் தான் போயிருக்கிறேன்’ என, என் பள்ளி தோழிகள் உறுதிபடுத்திவிடுவார்கள்
திரும்ப நான் வரும் போது, ‘என்னிடம் ஷூட்’ பற்றி கேட்பார்கள். ‘நான் சாதாரணமாக சொல்லி முடித்துவிடுவேன்’. ஆனால் அதையே, ‘இவ ரொம்ப ஓவரா பில்டப் பண்றா’ என்றெல்லாம் பேசியவர்களும் உண்டு. அது எனக்கு வருத்தம் தந்தது. அம்மா தான், என்னை சமாதானம் செய்தார்.
மூக்குத்து அம்மன் படத்திற்குப் பின் என்னை நிறைய பேர் அடையாளம் கண்டு கொண்டார்கள். நான் என்னவாக நடிக்க வேண்டும் என்று நினைத்தேனோ, அது அயலியில் முடிந்து விட்டது. முதலில் மேக்கப் இல்லாமல் இருப்பதை பார்க்கும் போது ஒரு மாதிரி இருந்தது. அதை ஃப்ரேமில் பார்த்த போது, அதுவே திருப்தியாக இருந்தது.
அயலி படத்திற்காக எடையை கூட்டியதை சகித்துக் கொள்ளும் விசயமாக நான் பார்க்கிறேன். அப்புறம், தாலி கட்டும் காட்சி. இந்த காட்சி பண்ணனுமா என்கிற ஃபீல் இருந்தது. ஆனால் அதுக்கு அப்புறம் இயக்குனர் எனக்கு புரிய வைத்தார், அதன் பின் அந்த காட்சியை பார்க்கும் போது சூப்பரான ஒரு ஃபீல் இருந்தது.
அனுபவங்களை நான் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன். அதை தான் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். சில ஆண்கள், பெண்களை இப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது கூடாது. அனைவரும் ஒன்று தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். மாதவிடாய் பற்றி எல்லாருக்கும் புரிதல் வேண்டும். அயலி மூலம் புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அயலியில் வரும் தலைமை ஆசிரியை போல நான் யாரையும் பார்த்ததில்லை. என் அம்மா தான் எனக்கு தலைமை ஆசிரியை. அவருக்கு தான் அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும். நான் கடந்த எந்த ஆசிரியையும் எனக்கு அந்த அளவிற்கு ஆதரவு தர இல்லை.
எனக்கும் முதலில் டாக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை தான் இருந்தது. இப்போது இன்ஜினியரிங் பண்ணிட்டு இருக்கேன்,’’
என்று அந்த பேட்டியில் அபி நக்ஷத்ரா பேசியுள்ளார்.
டாபிக்ஸ்