தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “அந்த பிரச்சினைதான் காரணம்.. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிகிறேன்” - சாய்ரா பானு அறிக்கை! - அதிர்ச்சியில் கோலிவுட்!

“அந்த பிரச்சினைதான் காரணம்.. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிகிறேன்” - சாய்ரா பானு அறிக்கை! - அதிர்ச்சியில் கோலிவுட்!

Nov 19, 2024, 11:24 PM IST

google News
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா தன்னுடைய கணவரை பிரிவதாக அறிவித்து இருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா தன்னுடைய கணவரை பிரிவதாக அறிவித்து இருக்கிறார்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா தன்னுடைய கணவரை பிரிவதாக அறிவித்து இருக்கிறார்.

ஏ.ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானு விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கிறார்.

இந்த முடிவு தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ ஏ. ஆர். ரஹ்மானுடன் பல வருடங்களாக மண வாழ்வில் இருந்த சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.

இந்த முடிவை அவர், அவர்களது உறவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்சினையால் ஏற்பட்ட அழுத்ததிற்கு பிறகு எடுத்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகளுக்கு இடையே நிலவிய பதற்றமும், சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு சேர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர். அதை இனி எதனைக்கொண்டும் இணைக்க முடியாது. சாய்ரா பானு, இந்த முடிவை வலி மற்றும் வேதனையின் வழியாகவே எடுத்திருக்கிறார். ஆகையால் இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து முடிவிற்கு தனிப்பட்ட பிரைவசியை அளிக்க வேண்டும்” குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அமீன்

இந்த அறிக்கையை அவரது மகனும் அமீனும் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் அவர் இந்த நேரத்தில் எங்களது குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இவர்களது திருமணம் மறைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மாவின் ஏற்பாட்டின் கீழ் கடந்த 1995ம் ஆண்டு நடைபெற்றது. இந்தத்தம்பதிக்கு கதீஜா மற்றும் ரஹீமா என்ற 2 மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளனர்.

முன்னதாக பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ அப்போது எனக்கு 29 வயது. நான் என்னுடைய அம்மாவிடம் சென்று எனக்கு பெண் பார்க்கும்படி கூறினேன். கல்யாணமான புதிதில் சாய்ரா வெளியே செல்ல முடியாததை எண்ணி அவர் மிகவும் விரக்தி அடைந்தாள். இதனையடுத்து நான் எல்லோரையும் போல நாம் ஷாப்பிங் மற்றும் இன்ன பிற இடங்களுக்கு செல்ல முடியாது என்று கூறினேன்” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை