தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ar Murugadoss Says He Is Not Planning To Make Ghajini 2

ARMurugadoss:‘ஹிந்திக்கு புதுசா ஒன்ணு செய்யப்போறேன்’;ஓப்பனாக பேசிய முருகதாஸ்!

Apr 01, 2023, 11:56 AM IST

கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என இயக்குநர் முருகதாஸ் பேசி இருக்கிறார்
கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என இயக்குநர் முருகதாஸ் பேசி இருக்கிறார்

கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என இயக்குநர் முருகதாஸ் பேசி இருக்கிறார்

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்து எகிடுதகிடு ஹிட் ரகம்.இவரது தயாரிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் 1947. கெளதம் கார்த்திக் நடித்திருக்கும் இந்தபடத்தை அவரது உதவி இயக்குநர் பொன்குமார் இயக்கி இருக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

22 Years Of Varushamellam Vasantham: முறைப்பெண் மீது வரும் காதல் ஒருவனை பொறுப்பு ஆக்கும் கதை.. பாடல்கள் வேறலெவல் ஹிட்!

Vairamuthu: கவிதைகளால் துளைத்த காதல்; மூத்த பெண்ணின் மீது விழுந்த பிரியம்; சாதி மீறி கரம் சாடிய வைரமுத்து காதல்!

Veera Thirumagan: ஏவிஎம் நிறுவனத்தின் முதல் ஆக்‌ஷன் படம்.. பிரமாண்டமாக உருவான படம்.. 62 ஆம் ஆண்டில் வீரத்திருமகன்

Actor Manobala : இயக்குநர், நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், யூடிபர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா நினைவுநாள் இன்று!

இது தொடர்பான நிகழ்வு ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், “ ஹிந்தியில் முதன்முறையாக 100 கோடியை வசூலித்த திரைப்படம் கஜினி. எனக்கு கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அந்த படத்தில் அசின் நடித்த கல்பனா கதாபாத்திரம் இறந்துவிட்டது. அமீர்கான் நடித்த சஞ்சய் கதாபாத்திரத்திற்கு மெமரி லாஸ்.

நான் புதியதாக ஒன்றை செய்ய வேண்டும். என்னிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. ஹிந்திக்கு புதியதாக ஒன்றை செய்வேன். பாகுபலி, கே.ஜி.எஃப் உள்ளிட்ட பல படங்கள் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெறுவதை பற்றி கேட்கும், “ நான் பான் இந்தியா சொல்லை கேட்டு கேட்டு சோர்வடைந்து விட்டேன்” என்றார்.

மேலும் 1947 படத்தை பற்றி பேசிய அவர், “பான்-இந்தியா என்ற சொல்லால் நீங்கள் அனைவரும் சோர்வடைந்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இது உங்களை ஆச்சரியப்படுத்தும், நீங்கள் அதை அனுபவிப்பீர்கள். படத்தைத் தொடங்கும்போது, ​​இதைத் தமிழ்ப் படமாக எடுக்க விரும்பினோம்; படப்பிடிப்பு முடிந்ததும், தயாரிப்பாளர் ஒருவர் அதைப் பார்த்து, இந்த படம் அதிக ரசிகர்களைச் சென்றடையும். அதனால் பான் இந்தியா திரைப்படமாக மாற்றலாமே என்றார். இந்தியர்களாகிய நமக்கு ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்தது. அதே உணர்வை உணர்ந்தோம். அதன்பின்னர் இந்த படம் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டது” என்றார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.