தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  படமும் ஹிட் பாட்டும்ஹிட் “அத நான் எதிர்பார்க்கவே இல்ல..” நயனால் நேர்ந்த விபரீதம்; 6000 சேலைகளை அள்ளிச்சென்ற மக்கள்! -அனு

படமும் ஹிட் பாட்டும்ஹிட் “அத நான் எதிர்பார்க்கவே இல்ல..” நயனால் நேர்ந்த விபரீதம்; 6000 சேலைகளை அள்ளிச்சென்ற மக்கள்! -அனு

Oct 22, 2024, 01:27 PM IST

google News
நயன் விஸ்வாஸம் படத்தில் அணிந்திருந்த சேலை குறித்தும், அதை மக்கள் விரும்பி 6000 சேலைகள் விற்பனை ஆன கதையும் படத்தின் ஆடை வடிவைப்பாளர் அனு வர்தன் பேசி இருக்கிறார்.
நயன் விஸ்வாஸம் படத்தில் அணிந்திருந்த சேலை குறித்தும், அதை மக்கள் விரும்பி 6000 சேலைகள் விற்பனை ஆன கதையும் படத்தின் ஆடை வடிவைப்பாளர் அனு வர்தன் பேசி இருக்கிறார்.

நயன் விஸ்வாஸம் படத்தில் அணிந்திருந்த சேலை குறித்தும், அதை மக்கள் விரும்பி 6000 சேலைகள் விற்பனை ஆன கதையும் படத்தின் ஆடை வடிவைப்பாளர் அனு வர்தன் பேசி இருக்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டு அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விஸ்வாஸம்’. முன்னதாக சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் வெளியான ‘விவேகம்’ திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், இந்தக்கூட்டணி வெற்றிக்கூட்டணி என்பதை நிரூபிப்பதற்காகவே அஜித் மீண்டும் அந்தப்படத்தில் சிவாவுடன் இணைந்தார்.

அவர்கள் நினைத்தது போலவே ‘விஸ்வாசம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே ஹிட் அடித்தன. குறிப்பாக கண்ணான கண்ணே பாடலுக்காக அந்தப்படத்தின் இசையமைப்பாளர் டி இமானுக்கு தேசிய விருது கிடைத்தது.

கவனம் ஈர்த்த நயன தாரா சேலை

அதே போல, இந்தப்படத்தில் நயன்தாரா அணிந்திருந்த சேலைகளும் மிகப்பெரிய கவனம் பெற்றன. சில கடைகளில் அதனை நயன்தாரா சேலை என்று கேட்டே மக்கள் வாங்கிச்சென்றனர். இந்த நிலையில் அந்த சேலையை நயனுக்கு கொடுத்தவரும், அந்தப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவருமான அனுவர்தன் அந்தப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து குமுதல் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, “ நானும் அஜித்தும் விஸ்வாசம் படத்திற்கு முன்னதாக வெளியான விவேகம் திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றி இருந்தோம். அந்தப்படத்தில் அஜித்திற்கு பொருந்தக்கூடிய ஆடைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து கொடுத்தேன். ஆனால், அதில் எதுவும் பரிதாக நோட்டீஸ் செய்யப்படவில்லை. ஆனால் விசுவாஸம் திரைப்படத்திற்கு, எதிர்பாராத விதமாக அவ்ளோ பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நயன்தாரா உடுத்திருந்த சேலைகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் கடைகளில் இருந்து அது போன்ற சேலைகள் விற்பனை அமோகமாக நடந்தன.

உண்மையில் சொல்கிறேன். நான் சேலைகள் இவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் ஆனது. எனக்கு காலையிலிருந்து போன் கால்கள் வந்து கொண்டே இருந்தன. அதில் பேசியவர்கள் நயன் தாரா உடுத்தியிருந்த அந்த சேலையை வாங்கினீர்கள்... இதை எப்படி செய்தீர்கள் என சரமாரியாக கேள்விக்கேட்டனர்

குறிப்பாக வானே பாடலில், நயன்தாரா தலையின் மீது கட்டு ஒன்று வைத்துக்கொண்டு, பர்பிள் மற்றும் பிங்க் கலரில் ஒரு சேலையை கட்டி வருவார் இந்த சேலையை கேட்டு எனக்கு அவ்வளவு போன்கால்கள் வந்தது.

அதே போன்ற சேலை கிட்டத்தட்ட 6000 எண்ணிக்கையில் விற்கப்பட்டதாக விற்பனையாளர்களிடம் இருந்து சில விஷயங்களை நம்மால் கணிக்க முடியாது. அப்படித்தான் அது நடந்தது” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பய

 

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி